புறஜாதி யுகத்தின் துவக்கமும் முடிவும் BEGINNING AND ENDING OF THE GENTILE DISPENSATION Jeffersonville Indiana U.S.A. 55-01-09 1. மாலை வணக்கம் நண்பர்களே! இன்றிரவு நான் இங்கு இருப்பதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாய் இருக்கிறேன். கொஞ்சம் முன்னர்தான், நான் இங்கிருந்து போனேன். நான் நினைக்கிறேன், சுமார் நான்கு மணிக்கு வெளியே போனேன். பின்னர் நாங்கள் இன்னும் சில நண்பர்களைக் காணச் சென்றோம். ஏழு மணி ஐந்து நிமிடத்திற்குத் திரும்பி வந்தோம். திரும்பி வந்தாக வேண்டியதாய் இருந்தது. எனவே, நான் பேசும் பொருளுக்காக வேண்டி தேடிக் கொண்டிருக்க வேண்டியதாயிருந்தது. இன்னமும் சகோதரன் நெவில்... 2. ஆனால் இப்பொழுதுதான் சாட்டநூகா டென்னஸியிலிருந்து யாரோ ஒருவரிடமிருந்து, அவருக்கு அன்பான ஒருவர் மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டு இன்னமும் சுயநினைவற்ற நிலையில், படுத்துக் கிடக்கிறார் என்று இங்கே சபையிலிருந்து வந்த ஜெபவிண்ணப்பம் ஒன்று வந்துள்ளது. ஆம் சகோதரனே, நீங்கள் நிச்சயமாய் செய்யலாம். சகோதரன் நெவில் இங்கே வாரும். ஆம் ஐயா. (சகோ.நெவில், சகோ.பில் என்கிறார் பேசுகிறார்). 3. நாம் மெல்கிசேதேக்கைக் குறித்து, அவர் யாராக இருந்தார் என்பதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நாம் அதனூடாக சென்று முடிந்தாற்போல் இல்லை. ஆனால் ஒருக்கால் அடுத்த முறை உள்ளே வரும்பொழுது நாம் அங்கேயிருந்து துவங்குவோம். இன்னமும் எபிரேயரின் புத்தகத்திலேயே இருக்கிறோம். ஆனால் இன்றிரவு நாம் தானியேலின் புத்தகத்திற்குத் திருப்புகிறோம். வேதாகமத்தை வைத்திருக்கிற நீங்கள் தானியேல் 12-ம் அதிகாரத்திற்கு திருப்புங்கள். நாம் அங்கேயிருந்து கொஞ்சம் வாசிக்கப்போகிறோம். தானியேலின் புத்தகத்திலிருந்து தேவனுடைய வார்த்தைகளை எடுத்துப் பேசலாம். 4. இப்பொழுது, எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு கொண்டு போகப்பட்ட தீர்க்கதரிசிகளில் தானியேல் ஒருவன். நேபுகாத்நேச்சார் ராஜாவினால் பாபிலோனுக்குக் கொண்டு போனதில் இவன் கொண்டு செல்லப்பட்டான். பாபிலோனுக்குள்ளாக அவன் போகையிலே அவன் வாலிபப் பையனாக இருந்தான். அந்த மகத்தான பழைய விசுவாசத்தை இன்னுமாய்ப் பற்றிக் கொண்டிருப்பவர்கள் அங்கே அதிகம் பேர்கள் கிடையாது. எனக்கு தானியேலைப் பிடிக்கும். ஏனென்றால் அவன் பாபிலோனுக்குச் சென்றபோது தான் ஒரு விசுவாசியாகவே இருந்து ராஜாவின் போஜனம் முதலானவைகளினால் தன்னைக் கறைப்படுத்திக் கொள்ளக் கூடாது, என்பதைத் தன்இருதயத்தில் தீர்மானித்திருந்தான். இப்பொழுது தானியேல் இருந்ததான அந்தக் காரியம், அவன் புறஜாதிகளுக்கு ஒரு தீர்க்கதரியாயிருந்தான். எல்லா புறஜாதியாரின் காலமும் எழும்புகிறதையும், விழுகிறதையும் தானியேல் கண்டான். புறஜாதி தீர்க்கதரிசி என்று நாம் அழைக்கிறோமே, அதில் தானியேல் முதல் ஒருவனாக இருக்கிறான். அவன் தன்னில்தானே ஒரு புறஜாதியான் அல்ல, ஆனால் அவன் புறஜாதியாரின் யுகத்தைத் துவக்க முதல், முடிவு மட்டுமாகக் கண்டவன், பொன்னான தலையிலிருந்து இரும்பும் களிமண்ணுமான பாதம் வரைக்குமாகக் கண்டான். அங்கே அவன் இருந்து கொண்டிருக்கையில் ராஜபோஜனத்தினாலும், ராஜாவின் காரியங்களினாலும் தன்னைத் தானே கறைப்படுத்திக் கொள்ளக்கூடாது என்று அவனுடைய இருதயத்தில் அவன் தீர்மானித்திருந்தான். 5. இன்னொரு குழுவான சகோதரர்கள், சாத்ராக், மேஷாக், ஆபேத் நேகோ என்ற பெயருடையவர்கள். அங்கே அவனோடு இருந்தார்கள் அவர்கள், தீர்க்கதரிசிகள் அல்ல. ஆனால் விசுவாசிகளாயிருந்தனர். அவர்களும் கூட, அவர்களுடைய இருதயத்தில் அவ்விதமாகத் தீர்மானித்திருந்தனர். அந்த நான்கு விசுவாசிகளும் நாம் செய்வது போன்று, ஒன்று கூடி வந்தபோது, அவர்கள் அடிக்கடி ஜெபக்கூட்டங்கள் நடத்தி இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். நாம் ஒன்று கூடி வருகிறோம், ஏனென்றால் நமக்குள் பொதுவான காரியங்கள் இருக்கின்றன. உங்களுக்குத் தெரியும். இனம் இனத்தைச் சேரும் என்ற பண்டைய கூறுதல் இருக்கிறது. அது ஒரு பழைய பழமொழியாகும். அது ஒரு அருமையான காரியமும் கூட. ஒரேவிதமான சிறகுகளையுடைய பறவைகள் ஒன்றாய்க் கூடிவரும் அதற்காக நீங்கள் சந்தோஷமாக இல்லையா? நிச்சயமாக. ஒரேவிதமான சிறகுகளையுடைய பறவைகள் ஒன்றாகக் கூடுகிறது. 6. அதிக காலத்திற்கு முன்பல்ல, நான் ஒரு கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அங்கே ஒரு மனிதன் ஏதோ ஒரு காரியத்தைக் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தான். காவலில் சென்ற ஆத்துமாக்களைக் குறித்து விவாதிக்கொண்டிருந்தான். அதாவது இயேசுவானவர் அவருடைய மரணத்திற்குப் பின்னர் போய்க் காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தாரே! அதைக் குறித்து பேசிக்கொண்டிருந்த இந்த மனிதன், நல்லது, அதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்றான். ஒரு கறுத்த மனிதன் எழுந்து நின்றான். அவன் வேதம் அதைத்தான் கூறுகிறது. அவர் போய்க் காவலில் உள்ள ஆவிகளுக்குப் பிரசங்கித்தார் என்று கூறுகிறது என்றான். அவர் என்னவென்று நீர் நினைக்கிறீர் என்றார். அதற்கு அவர் அது என்னவென்றால் அந்த ஆவிகள் பூர்வத்தில் நோவா பேழையை ஆயத்தம் பண்ணும் நாட்களிலே, தேவன் நீடிய பொறுமையோடே காத்திருந்தபோது கீழ்ப்படியாமல் போனவைகள். சரியாக வேதம் கூறினது போன்றே என்றான். அதற்கு அவர் இல்லை. அது இந்த சபைதான், ஸ்தாபனங்களிலும் மற்றக் காரியங்களிலும் இருக்கின்ற மற்ற பெந்தெகொஸ்தே ஜனங்களுக்குப் பிரசங்கித்து அவர்களை காவலிருந்து வெளியே கொண்டுவருவதாகும். அதற்கு அவர் இப்பொழுது இங்கே பாருங்கள் சகோதரனே! பெந்தெகொஸ்தே என்று இங்கு குறிப்பிடவேயில்லை. அவர் அதைக் கூறினார், அவர் போய்க் காவலில் உள்ள ஆவிகளுக்கு பிரசங்கித்தார் என்று தான் கூறினார், என்றார். ஆகையினால் நான், ஆமென் அது உண்மை என்றேன். அந்த ஊழியக்காரர் திரும்பி என்னை நோக்கிப்பார்த்து ஒரே விதமான சிறகுகளையுடைய பறவைகள் ஒன்றாகக் கூடிவரும் என்றான். அதற்கு நான் அது உண்மையாயிருக்கிறது. விலையேறப் பெற்ற அதே விசுவாசத்தையுடைய சகோதரர்கள் வேதவார்த்தை என்ன கூறுகிறதோ அதை சத்தியம் என்று விசுவாசிப்பாகள் என்று கூறினேன். 7. தானியேலுக்கு அது போன்ற மூன்று கூட்டாளிகள் இருந்தனர். அவனோடு அவர்களிருந்தனர். உங்களுக்குத் தெரியும், நீங்கள் வீட்டை விட்டு வெளியே போயிருக்கும்போது யாரோ உங்களோடிருக்கிறார். உங்களோடு சேர்ந்து நிற்கும் யாரோ இருக்கிறார். ஒரு உண்மையான நல்ல நண்பர் இருக்கிறார் என்பதைக் காண்பது அது நன்மையாகவே இருக்கும். ஓ, என்னே! அந்நிய தேசங்களில் உன் பக்கத்தில் நெருங்கிய நண்பனாக உன்னை நேசிக்கிறவராக உன் பக்கத்தில் நிற்க யாரோ ஒருவர் விசேஷமாக ஒரு அந்நியனாக அப்படி நிற்க விரும்புகிறார் என்பதைக் காணும்போது அது அவ்வளவு பாத்திரமானதாக இருக்கும். இந்த சகோதரர்கள் அவர்களுடைய பட்டணத்திலிருந்து கொண்டு போகப்பட்டார்கள். அவர்களுடைய பட்டணம் தீக்கிரையாகிவிட்டது. அவர்களுடைய பாத்திரங்களும் தேவனுடைய பரிசுத்தமான காரியங்கள் இவைகளெல்லாம் பாபிலோனுக்குக் கொண்டு போகப்பட்டு நேபுகாத்நேச்சார் இராஜாவின் பொக்கிஷ வீட்டிற்குக் கொண்டு போய் வைக்கப்பட்டது. அவன் ஒரு மகத்தான மகத்தான புறஜாதி ராஜா. அவன் அதைக் கொண்டு போனான். 8. இப்பொழுது, அவர்கள் தேவனை விட்டு விலகிப்போன காரணத்தினால் அவர்களுடைய பட்டணம் எரிக்கப்படவும், சபை எரிக்கப்படவும், அவர்களுடைய பட்டணத்திற்கு அவர்களைக் கொண்டு போகவும் தேவன் அனுமதித்தார்... ஆனால் இதுதான் என்னுடைய ஊழியக்காரன் என்று அவருடைய கரங்களை அவன் மேல் போட்டுக் கூறக்கூடிய ஒரு விசுவாசியை அவர் இன்னமும் உடையவராக இருக்கிறார். தேவன் எப்பொழுதும் எங்கேயும் ஒரு சாட்சியை உடையவராயிருக்கிறார். ஒரு சாட்சி இல்லாமல் அவர் இருந்ததே இல்லை . எப்படியாயிருந்தாலும் அவர் எங்கேயோ ஒருவரை உடையவராக இருப்பார். ஆனால் தம்முடைய கரங்களை அவன் மேல் போட்டு இதுதான் என்னுடைய ஊழியக்காரன், நான் கூறுகிறபடியே அவன் செய்வான் என்று கூறக்கூடிய யாரோ ஒருவரை அவர் எப்பொழுதும் உடையவராயிருப்பார். இப்பொழுது நமக்கு அது பிடிக்கும். 9. அப்படியானால் கவனியுங்கள். இந்த சகோதரர்கள் அங்கே இருந்தபொழுது அவர்கள் சோதனைக்குள்ளாக்கப்பட்டனர். கர்த்தராகிய இயேசுவை அவர்களுடைய சொந்த இரட்சகராக, உண்மையாகவே ஏற்றுக்கொண்ட ஒரு உண்மையான விசுவாசிக்கு இது மிக அழகான மாதிரியாய் இருக்கிறது. அவன் எப்பொழுதும் சோதனைக்குட்படுத்தப்படுகிறான். சாத்தான் இன்னும் சோதிக்கின்ற வியாபாரத்திலேயே இருக்கிறான். உங்களுக்கு உதவி செய்வதற்காகவே அது வருகிறது. அது உங்களுடைய நன்மைக்கே! தேவனிடத்தில் வருகிற ஒவ்வொரு மகனும் சோதிக்கப்படவேண்டும், சிட்சிக்கப்படவேண்டும், அடிக்கப்படவேண்டும். வேறு வார்த்தைகளில் ஒரு சிறு அடியும், சரியாக்குதலும் கொடுக்க வேண்டும். தேவன் ஏதாவது சிட்சையை நமக்குக் கொடுக்கும்போது நம்மால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லையானால், நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இராமல், வேசிப்பிள்ளைகளாய் இருக்கிறோம். இப்பொழுது பரலோகத்துக்கு நேராக தன் விசுவாசத்தை உண்மையாகவே நோக்கியிருக்கிற எந்தவொரு மனிதனும் இங்கே பூமியின் மேல் என்ன நடந்தாலும் அவனுக்கு அதைக்குறித்து அக்கறையில்லை. அப்பொழுதும் அவன் விசுவாசமானது பரலோகத்தை நோக்கினதாகவே இருக்கும். அவனுடைய நண்பர்கள் அவனைக் கைவிடலாம், அவனுடைய குடும்பம் அவனைக் கைவிடலாம், அவனுடைய போதகர் அவனைக் கைவிடலாம் ஆனால் அங்கே ஒருவர் இருக்கிறார், அவனை அவர் கைவிடவே மாட்டார். அது தேவனாயிருக்கிறது. உன்னுடைய சிந்தை அந்தத் தீர்மானத்தை தீர்மானிப்பதுதான், எனக்கு விருப்பம். 10. தானியேல் அவனுக்குப் பின்னால் இருந்த எல்லாப் பாவங்களையும் எரித்துப் போட்டான். இனியும் திரும்பிப் போவதாக, தானியேலுக்கு திட்டமே இல்லை. அவன் பின் விட்டுவந்த அடிச்சுவடு பாதையை கவனித்துப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. கடந்த காலங்களின் காரியங்களை யெல்லாம் விட்டுவிட்டு உன்னை அழைப்பின் இலக்கை நோக்கி முன்னேறிச் சென்றான். அதைத்தான் நாம் செய்து கொண்டிருக்க வேண்டும். அதைத்தான் சபையானது செய்துகொண்டிருக்க வேண்டும். நான் கவனித்ததில் அவனுக்குச் சோதனையைக் கொடுக்கும்படி சாத்தானுக்கு தேவன் அனுமதி கொடுத்தார். ஓ.... அவர்களை அக்கினியினால் பரிசோதித் தார்கள், அவர்கள் அவனைக் கூட, சிங்கத்தின் கெபியில் சோதித்தார்கள். ஒவ்வொரு சமயத்திலும் முற்றிலும் ஜெயங்கொள்கிறவர்களாகவே தேவன் அவர்களை வெளியே கொண்டு வந்தார். நீதிமானுக்கு வரும் சோதனைகள் அநேகமாயிருக்கும் ஆனால் தேவன் அவைகள் எல்லாவற்றினின்றும் அவனை விடுவிப்பார். அது எவ்வளவு அற்புதமாய் இருக்கிறது. நாம் எப்படியாய் இதைப் பாராட்டுகிறோம். துன்பங்கள், உபத்திரவங்கள், சோதனைகள் எல்லாம் நன்மைக்கேதுவாய் நடக்கிறது. கொஞ்சம் கழித்து தேவன் அதைக் கண்டு, அவருடைய நம்பிக்கையை உங்கள் மேல் வைப்பார். பிறகு அவர் உங்களுக்கு மகத்தான காரியங்களைச் செய்வார். 11. இப்பொழுது தானியேல் அவன் சொந்த ஜனத்திலிருந்தும், அவனுடைய பட்டணத்திலிருந்தும் அவனுடைய சொந்த சபையினிடத்திலிருந்தும் விலகி தூரமாய் ஒரு அன்னிய தேசத்தில் இருந்தபொழுது அவன் தேவனுடைய ஒரு கருவியாய் ஆனான் என்று நாம் கண்டறிந்தோம். தேவன் அவனை உபயோகப்படுத்தினார். இப்பொழுது உங்களால் கூடுமானால் எந்தக் காரியத்திலிருந்தும், நீங்கள் விலகி தூரமாய் இருக்கலாம். நீங்கள் நேசிக்கின்ற யாவரையும் விட்டு தூரமாய் இருக்கலாம் அல்லது உங்கள் சபையிலிருந்து தூரமாய் இருக்கலாம் ஆனாலும் இன்னமும் நீங்கள் தேவனுடைய கரங்களில் ஒரு கருவியாய் இருக்கலாம். தேவன் உங்களை ஒரு சாட்சியாக உபயோகிக் கலாம் அல்லது அவர் விரும்புகிற எந்தக் காரியத்திற்காகவாவது உங்களை உபயோகிக்கலாம். 12. வேதாகமானது அப்படிப்பட்டதான காரியங்களால் எந்தப்பக்கம் திருப்பினாலும் நிறைந்திருக்கிற அழகான உதாரணங்களால் காணப்படுகிறது. வேதத்தை வாசிக்க நீங்கள் விரும்புகிறதில்லையா? ஓ.... நான் அதை வாசிப்பேன், சில சமயங்களில் அழுவேன். இங்கே சில நாட்களுக்கு முன்னர் நான் அறைக்குள்ளாக அங்கே வாசித்துக் கொண்டிருந்தேன். அங்கே அப்படியே உட்கார்ந்து கொண்டு குழந்தையைப் போல் அழுதேன். நான் எழுந்து என்னுடைய நாற்காலியைச் சுற்றி நடந்து, என்னுடைய கரத்தை நாற்காலியின்மேல் வைத்து மீண்டுமாய் என்னுடைய வேதாகமத்தை நோக்கிப் பார்த்தேன், மீண்டுமாய் அழுதேன், மீண்டுமாய் நாற்காலியைச் சுற்றி நடந்து மீண்டுமாய் அதை நோக்கிப் பார்த்தேன். ஓ, தேவனே, தங்களுடைய நம்பிக்கையை அதற்குள்ளாக வைக்கவும் அதை விசுவாசிக்கவும் கூடிய தைரியமுள்ள ஒவ்வொரு மனிதனுக்கும் ஸ்திரீக்கும் அங்கே அதற்குள்ளாக நித்தியஜீவன் இருக்கிறது என்று எண்ணினேன். நித்தியஜீவன். அவர், வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள் அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக் குறித்து சாட்சி கொடுக்கிறவைகளும் அவைகளே! என்று சொன்னார். வேத வார்த்தைகளை ஆராய்ந்து பாருங்கள். தேவனுடைய வார்த்தை நம்முடைய பாதங்களுக்கு ஒரு தீபமாய் இருக்கிறது. அப்படியானால், நாம் வழிநடத்தப்பட வேண்டியவர்களாய் இருக்கிறோம். ஜெயத்திலிருந்து ஜெயத்திற்கு நம்மை நடத்தும் பாதையைப் பின் தொடரும் வெளிச்சமாய் அது இருக்கிறது. 13. இப்பொழுது உங்களுக்கு ஒரு ஜெயம் கிடைப்பதற்கு முன்னர் அங்கே ஒரு யுத்தம் இருந்தாக வேண்டும். அங்கே யுத்தங்களே இல்லையென்றால், அங்கே வெற்றிகளே கிடையாது. எனவே யுத்தங்களுக்காகவும் சோதனைகளுக்காகவும் நாம் நன்றியுள்ள வர்களாய் இருந்தாக வேண்டும். அது நாம் வெற்றிகளை அடைவதற்கு அவைகள், தேவன் நமக்குக் கொடுக்கின்ற தருணங்களாய் இருக்கின்றது. ஓ, என்னே! அது உங்களைச் சற்று மேலாக ஆக்கவில்லையா. புரிகின்றதா! யுத்தம் தொடர்ந்து வரும் உங்களைக் குறித்து ஏதாவது மோசமான காரியங்களை யாரோ கூறுகிறார்கள், சுகமின்மை உங்கள் மேல் வருகிறது. அவர்தாமே உங்களைச் சுகப்படுத்தவும், அவருடைய தயையை உங்கள் மேல் காட்டவும், அவருடைய நோக்கம் என்ன என்பதைக் காணச் செய்யும்படியாய் ஒருக்கால் அந்தச் சிறிய தொல்லைகளை தேவன் உங்களுக்கு கொடுத்திருக்கலாம் அவர் உங்களை நேசிக்கிறார். 14. பரிசுத்த தேசங்களில் அங்கே எருசலேமில் கூறப்படும், அந்த ஆட்டுக்குட்டியை சுமந்து கொண்டுபோன, அந்தப் பழைய மேய்ப்பனின் கதை. நீ எதற்காக அதை சுமந்து கொண்டு போகிறாய் என்று கேட்டான். அவன் அதற்கு ஒரு கால் உடைந்து போய்விட்டது என்றான். அது எப்படி உடைந்தது? குன்றிலிருந்து விழுந்ததா? என்றான். இல்லை, நான் அதன் காலை உடைத்தேன் என்றான். அதற்கு அவன் அந்த ஆட்டின் காலை உடைக்கு மளவுக்கு நீ, ஒரு கொடூரமான மேய்ப்பனாய் இருக்க வேண்டும் என்றான். அவனோ, நான் அதை நேசிக்கிறேன். அது விலகி ஓடிக்கொண்டே இருக்கிறது. அது என்னையே கவனிக்க அதற்கு மனதில்லாமல் போயிற்று, ஆகையினால் நான் அதின் காலை உடைத்தேன். அதனால் என்னால் அதற்கு அதிகப்படியான கவனத்தைக் கொடுக்கமுடியும். அதனால் அது என்னை நேசித்துப் பின்பற்றும் என்றான். 15. சில சமயங்களில் தேவன் நம்முடைய ஆரோக்கியத்தில் சிறிது அதிக கவனத்தை நம்மேல் வைக்கும்படியாக அதில் நம்மை முறிந்து போகப் பண்ணுகிறார். நம்மை அவர் தொடையின்மேல் கிடத்தி, மருத்துவர்கள் ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறும்போது தம்முடைய மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சுகிறார். அவர் நம்மைத் தம் மடியின் மீது எடுத்துக்கொண்டு பார், நான் உன்னை நேசிக்கிறேன். நான் நீ சுகமடையும்படியாகச் செய்யப் போகிறேன் என்கிறார் புரிகின்றதா! ஓ, அது வாழ்க்கையை சிறிது மேலானதாக ஆக்கவில்லையா? ஓ, அவர் அவ்வளவு மகத்தானவர். அவர் ஒரு அற்புதமான மேய்ப்பனாய் இருக்கிறார். இல்லையா! கர்த்தர் என் மேய்ப்பராய் இருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன் என்று தாவீது கூறியதில் வியப்பொன்றுமில்லை. அவர் எப்படியாய் நம்மை அமர்ந்த தண்ணீர்களண்டை நடத்தி, நம்முடைய ஆத்துமாவைத் தேற்றுகிறார். நம்முடைய பாத்திரம் நிரம்பி வழியச் செய்கிறார். சத்துருக்களுக்கு முன்பாக நம்மை அபிஷேகம் பண்ணுகிறார். உங்களுடைய சத்துருவுக்கு முன்பாக நீங்கள் எப்பொழுதாவது வெறுமனே சாட்சி மட்டும் பகிர்ந்து உங்களுடைய பாத்திரம் கொதித்து வழியும் வரைக்கும் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறீர்களா? உங்களுடைய சத்துருக்களுக்கு முன்பாக அபிஷேகம் பண்ணப்படுவது என்பது அவ்வளவாய் அற்புதமாயிருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?. 16. இப்பொழுது கவனியுங்கள் பின்னர், தேவன் நேபுகாத்நேச்சார் ராஜாவை எடுத்து அவருடைய கரத்தில் ஒரு கருவியாய் அவனை ஆக்கினார். புல் வளர்ந்து அவனுடைய தலைமயிர் சிங்கத்தைப் போல அல்லது, கழுகின் இறகுகளைப் போல, அவனுடைய நகங்கள் கழுகின் இறகுகளைப்போல அந்த வண்ணமாக ராஜாவாகிய நேபுகாத் நேச்சார் மரித்த பிறகு, தேவன் தாமே யார் உண்மையான ராஜா என்பதை அவனுக்குத் தெரியப் பண்ணினார். அவனுடைய மரணத்திற்குப் பின்னர், அவனுடைய பேரன் பெல்சாத்ஷார் அவனுடைய பட்டத்திற்கு வந்தான். அப்போது அவன் நேபுகாத்நேச்சாரைக் காட்டிலும் பொல்லாதவனாக இருந்தான். ஒருநாள் இரவு அவர்களுக்கு அங்கே மகத்தான பெரிய ஒரு விருந்து உண்டாயிருந்தது. அவர்களுடைய நீதிபதிகளையும், எல்லா அதிகாரிகளையும் உள்ளே ஒரு மகத்தான கேளிக்கைக்காக அழைத்தார்கள். அவர்களுக்கு உண்டாயிருந்த அந்த கேளிக்கையிலே அவர்கள் போய் தேவனுடைய பாத்திரங்களை வெளியே கொண்டு வரச்செய்து, அவைகளை எடுத்து தேவனைக் கேலி செய்யும்படியாக அதில் திராட்சை ரசத்தை ஊற்றி அவர்களுடைய தேவனுக்கு வாழ்த்துக் கூறி அருந்தினார்கள். 17. இப்பொழுது ஒரு மனிதன் இவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருக்கிறான். ஆனால், அங்கே ஜீவனுக்கும் மரணத்திற்கும் இடையே ஒரு கோடு இருக்கிறது. அவன் அதை ஒருபோதும் கடந்து போகக் கூடாது. புரிகின்றதா! நீங்கள் உங்கள் சிறிய புத்தியீனத்தோடு கொஞ்சகாலம் செல்லலாம், ஆனால் அந்தக் கோடு எங்கே இருக்கிறது என்பதைஅறிந்திருப்பது நலமானதாயிருக்கும். ஏதாவது ஒன்றில், கர்த்தர் உங்களை எப்பொழுதாவது சோதித்திருக்கிறாரா! அவர் நம் எல்லாருக்கும் அவ்வாறு செய்திருக்கிறார். இப்பொழுது அது போதுமானதாயிருக்கிறது என்று அந்த எச்சரிப்பின் லகானை இழுக்கிறார். அப்படியானால் நீங்கள் அந்தக் கோட்டை தாண்டுகிறதாயிருந்தால் அப்பொழுதிலிருந்து நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கவனிப்பது மேலானதாயிருக்கும். 18. அந்த இரவு அந்த எச்சரிப்பு லகானை அவன் மேல் இழுத்தபோது அவன் அதற்கு செவிகொடுக்கவில்லை. அங்கே போய்க் கர்த்தருடைய பாத்திரங்களைக் கொண்டு வந்து அவர்களுடைய தேவர்களுக்கு வாழ்த்துக் கூறி அவைகளில் மதுபானத்தை ஊற்றிப் பருகினார்கள். பின்னர் அங்கே ஒரு கையுறுப்பு வானத்திலிருந்து இறங்கி கீழே வந்து அந்தச் சுவற்றின் மேல் மெனே, மெனே, தெக்கேல் உப்பார்சின் என்று எழுதியது. அதன் அர்த்தம் நீ தராசிலே நிறுக்கப்பட்டு குறைவுள்ளவனாகக் காணப்படுகிறாய் என்பதாகும். ஒருவராலும் அதை வியாக்கியானிக்க முடியவில்லை. அது அறியாத பாஷையாக இருந்தது. அங்கே ஒரு மனிதன் இருந்தான். தானியேல், வியாக்கியானிக்கும் வரத்தை உடையவ னாயிருந்தான். எனவே அவன் இறங்கி வந்து வியாக்கியானித்து என்ன சம்பவிக்கும் என்று ராஜாவிடம் கூறினான். அங்கே தேவன் அந்த தேசத்தை, பாபிலோனை அழித்தார். 19. தானியேல் அங்கே இருக்கின்ற வேளையிலே அவன் மகத்தான தரிசனங்களைக் கண்டு புறஜாதி ராஜ்ஜியத்தின் முடிவை ஒழுங்கில் ஏற்படுத்தியும், அறிந்தும் இருக்கிறதான இந்த மகத்தான ஆறுதலுக்காக அவைகளைக் குறித்து எழுதி வைத்திருக்கிறான். எவ்வளவு பரிபூரணம் என்று கவனியுங்கள். இப்பொழுது அதை நெருக்கமாய்க் கொண்டுவாருங்கள். அவன் ராஜாவின் சொப்பனத்தை வியாக்கியானித்தபோது, அவன் முதலாவதாக அந்த சிலை வெளி வயலில் நின்று கொண்டிருக்கிறதைக் கண்டான். அவன் ஆவிக்குரிய ஒரு மனிதனாக இருந்தான். அவன் சொப்பனங்கள் கண்டான், தரிசனங்கள் கண்டான், சொப்பனங்களை வியாக்கி யானித்தான். தேவன் அவனோடு இருந்தார். யாவரும் அதை அறிந்தும் கூட இருந்தனர். அவன் தரிசனத்தைக் கண்டபோது தலை பொன்னாகவும், மார்பு இங்கே வெள்ளியாகவும், வெண்கலத் தொடைகளும், இரும்புப் பாதங்களையும் கண்டான். ஒவ்வொரு ராஜ்ஜியமும் சிறிது கடினமாக இருக்கிறதைக் கவனியுங்கள். நேபுகாத் ராஜாவின் ராஜ்ஜியம் பொன்னான தலையாயிருந்தது. அவன் அதை வியாக்கியானித்து அந்த ராஜ்ஜியங்கள் எப்படி முடிவு மட்டுமாய் ஒன்றை ஒன்று மேற்கொண்டு வருமென்று கூறினான். பின்னர் கவனியுங்கள். மிகவும் மிருதுவான பொன்னிலிருந்து, அதற்கடுத்தது வெள்ளியாயிருந்தது, அதற்கடுத்தது வெண்கலமாயிருந்தது, அதற்கடுத்தது இரும்பாய் இருந்தது. கடினமாய், கடினமாய், குளுமையாய் விலகிப் போயிற்று. பின்னர் கவனியுங்கள். இவை எல்லாவற்றின் மத்தியிலும், கைகளினால் பெயர்க்கப்படாததும், மலையிலிருந்து வெட்டப்பட்டதுமான கல் வரும் வரைக்குமாய் அந்த சிலையை தானியேல் பார்த்துக் கொண்டிருந்தான். அது உருண்டு வந்து சிலையின் மேல் மோதி அதை நொறுக்கிக் கோடைக்காலத்தில் கோதுமை போரடிக்கிற காலத்திலிருந்து பறந்து போகிற பதரைப் போலாயிற்று. காற்றானதுஅவைகளை அடித்துக்கொண்டு போயிற்று. அந்தக் கல்லோவென்றால் வளர்ந்து ஒரு பெரிய பர்வதமாகி பூமியெல்லாவற்றையும் கடலையும் நிரப்பிற்று. அது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையாயிருக்கிறது. இப்பொழுது அது சமீபமாயிருக்கிறது. 20. அவன் தொடர்ந்து கூறுகிறான், ஒருநாள் ஆற்றங்கரையில் இருந்தபொழுது அவன் ஒரு நினைவிழந்த நிலையிலே, ஒரு தரிசனத்தைக் கண்டான். அவனோடு அநேகர் இருந்தனர். அவர்கள் அந்தத் தரிசனத்தைக் காணவில்லை, ஏனென்றால் அது தானியேலுக்கு மட்டுந்தான் கொடுக்கப்பட்டது. உங்களால் காணமுடிகின்றதா! யாராவது ஒருவர் உங்கள் பக்கத்தில் நின்றுகொண்டு, உன்னுடைய ஜீவனை இரட்சிக்கும்படியாக உன்னால் காணமுடியாத காரியங்களை பார்த்துக் கொண்டிருப்பார்கள், அது சரியே. யாரோ ஒருவர், நான் அதை விசுவாசிப்பதில்லை, ஒரு காரியத்தையும் நான் கண்டதேயில்லை என்று கூறினார்கள். ஏனென்றால் நீங்கள் காணும்படியாக அது உங்களுக்கு இல்லை. பவுலோடு சென்ற ஜனங்கள், பவுல் குதிரையின் மேல் இருந்து தாக்கப்பட்டபோது அவன் கீழே தரையில், புழுதியில் விழவேண்டியதாயிருந்தது. சேற்றினில் விழுந்தது போன்று புழுதியினில் விழுந்தான். அவர்களில் ஒருவனும் அந்தச் சத்தத்தை கேட்கவுமில்லை அல்லது அந்தத் தரிசனத்தை காணவுமில்லை. ஆனால் பவுலோ அதைக் கண்டான். அந்த நட்சத்திரமானது ஒவ்வொரு விண்வெளி ஆராய்ச்சி கூடத்தையும் கடந்து சென்றபோது, அந்த ஞானிகளைத் தவிர வேறொருவராலும் அதைக் காண முடியவில்லை. அந்தவிதாய் அநேக காரியங்களை தேவன் சில குறிப்பிட்ட ஜனங்கள் காணும்படியாக வைத்திருக்கிறார், மற்றவர்களால் அதைக் காணமுடியாது. ஓ, நான் அதை நேசிக்கிறேன். தேவன் அவருடைய எல்லையற்ற ஞானத்தில் சில குறிப்பிட்ட காரியங்கள் சம்பவிக்கும்படியாக முன்குறித்திருக்கிறார் அல்லது முன் நியமித்திருக்கிறார். உன் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிற நபருக்கு அது சம்பவிக்கலாம். நீயோ அதைக் குறித்து ஒன்றுமே அறியாதிருப்பாய். தோத்தானைப் பாருங்கள். தோத்தானில் எலியா இருந்தபொழுது, அந்நியர்களான சீரியரின் சேனைகளானது அவர்களை அப்படியே வளைத்துக் கொண்டது. தீர்க்கதரிசியாகிய எலியாவை அவர்கள் தேடிக்கொண்டிருந்தனர். ஏனென்றால் யுத்தம் செய்யும்படியாக சீரியர்கள் ஒவ்வொருமுறையும் இஸ்ரவேலர் மேல் வரும்போதும் இஸ்ரவேலர்கள் அவர்களுக்குப் பதிவிருக்கிறார்கள் என்பதை அவர்கள் கண்டறிந்தார்கள். எனவே சீரியாவின் ராஜா அவர்களை அழைத்து இப்பொழுது ஒரு நிமிடம் பொறுங்கள். நம் சார்பாக யார் இருக்கிறார்கள், இஸ்ரவேலரின் சார்பாக யார் இருக்கிறார்கள், என்னுடைய கூட்டத்திலிருக்கிற யாரோ ஒருவன் வேவுகாரனாய் இருந்து இஸ்ரவேலரிடத்தில் போய் நாம் எங்கே வருகிறோம் என்று கூறுகிறார்கள். ஏனென்றால் அவர்கள் எப்பொழுதும் நமக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று கூறினான். அவர்களால் ஒரு மனிதன் அவனைக் குறித்து ஒரு சிறிய ஆவிக்கேதுவானதை உடையவனாய் இருந்தான். அவன் அப்படியில்லை என் தகப்பனே! அது தீர்க்கதரிசியாகிய எலியாதான். உம்முடைய அடுத்த அசைவாக நீர் என்னசெய்யப்போகிறீர் என்பதை அவனுடைய படுக்கையறையில் அவன் அறிந்து கொள்ளுகிறான் என்று கூறினான், ஆமென். ஓ, அணுசக்தி வல்லமைகள் குலுக்கத் துவங்குகிறபோது, நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன். ஏனென்றால் எங்கே போகவேண்டுமென்று தேவனுடைய வார்த்தை நமக்குக் கூறியிருக்கிறது. கிறிஸ்து இயேசுவாகிய கன்மலைக்கு ஓடிப்போங்கள். அதற்குள்ளாக இருக்கும் ஒவ்வொரு மனிதனும் பாதுகாவலாயும் பத்திரமாயும் இருக்கிறான். ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தாது. எந்த அணுகுண்டும், எந்த கோபால்ட் குண்டும், வேறு எந்தக் காரியமும் தேவனாலே பாதுகாக்கப்பட்டதைத் தொடமுடியாது. பாதுகாவலாய், பத்திரமாய் நங்கூரமிடப்பட்டதாய் இருக்கிறது. கிறிஸ்து இயேசுவுக்குள்ளாய் என்ன ஒரு அற்புதமான நம்பிக்கையுடையவர்களாய் இருக்கிறோம். 21. கவனியுங்கள். அவனோடு அங்கே ஒரு மனிதன் இருந்தான். அவனுடைய வேலைக்காரன். ஆவிக்குரிய பையன் அவனோடு நடந்து தீர்க்கதரிசியின் கரங்களைக் கழுவ தண்ணீரை ஊற்றிக் கொண்டிருந்தவன். ஒரு மகத்தான ஸ்தானத்தை உடையவனாயிருந்தான். ஆனால் சீரியரின் சேனையானது தோத்தானை வளைத்துக் கொண்டதை அவன் கண்டபோது என் தகப்பனே! அங்கு பாரும் என்ன ஒரு மகத்தான ஒரு கூட்டம், நாம் எல்லாம் சூழ்ந்துக் கொள்ளப்பட்டிருக்கிறோம் என்று கூறினான். அது இப்பொழுது இயற்கையானதாய் இருக்கிறது. அப்பொழுது எல்லாக் காரியங்களும் தவறாய் போய்க்கொண்டிருக்கும்போது அவர்களுடைய விரலை உங்களுக்கு நேராக நீட்டி இதையும் அதையும் கூறிக்கொண்டு நீங்கள் சுகமாக முடியாது என்று வைத்தியர் கூறும்போது, ஓ, என்னே! இதுதான் முடிவு என்று நீங்கள் நினைக்கிறதிற்கு அது வெறுமனே இயற்கையான காரியமாய் இருக்கிறது. ஆனால் எலியாவோ அவர்களோடு இருக்கிறவர்களைக் காட்டிலும் நம்மோடு இருக்கிறவர்கள் அதிகம் என்றான். இப்பொழுது அந்தத் தீர்க்கதரிசி அல்லது வேலைக்காரனான கேயாசி எப்படி உணர்ந்திருப்பான் என்று நீங்கள் ஊகிக்கலாம். அவன் அப்படியே எலியா அவனை நோக்கிப் பார்த்து ஏன் நான் ஒருவரையும் காணவில்லையே என்று கூறினான். அவன் தேவனே! இந்தப் பையனுடைய கண்களைத் திறந்தருளும் என்றான். இதோ இங்கே இருக்கத்தக்கதாக அவன் பெற்றுக் கொண்டான். அங்கு சுற்றிலுமாக தேவன் அவனுடைய ஆவிக்குரிய கண்களைத் திறந்த போது தீர்க்கதரிசியோடு அக்கினிமயமான தூதர்களும், அக்கினிமயமான இரதங்களும் இருந்தன என்றான். அவன் கண்ட அக்கினிமயமான இரதங்கள். அந்த சீரிய இராணுவத்தைக் காட்டிலும், ஆயிரக் கணக்கில் அதிகமாயிருந்தது. அக்கினிமயமான தூதர்கள். அக்கினி மயமான குதிரைகள், அக்கினி மயமான இரதங்கள் இருந்தன. அவருக்குப் பயந்தவர்களைச் சூழ தேவதூதர்கள் பாளையமிறங்குவார்கள் என்று வேதம் கூறுகிறது. 22. அதே விதமாகத்தான் இன்றிரவும் உள்ளது. இன்றிரவு இங்கே ஒரு மனிதன் இருந்து உங்களின் ஊடாக அடிக்கக் கூடிய வல்லமையை உடையவனாக இருந்து இங்கே பாருங்கள். இந்த ஜெபக்கூடாரத்தைச் சுற்றி இன்றிரவு தூதர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள் என்று கூறினால் என்ன சம்பவிக்கும் என்று நான் ஆச்சரியப்படுகிறேன். உங்களுடைய எஞ்சியுள்ள ஜீவிய காலமெல்லாம் இங்கே நீங்கள் ஒரு அங்கத்தினர்களாய் இருப்பீர்கள் நிச்சயமாக ஆம் ஐயா. உங்களுடைய இயற்கையான கண்களால் சில சமயங்களில் உங்களால் அதைக் காணமுடியாது. ஆனால் உங்களால் உணர்ச்சி வேகத்தை அதற்கு நெருக்கமாக ருசிக்க முடியும். ஏதோ காரியம் அருகில் இருக்கிறது என்று ஒரு ஆறாவது புலன் காட்டுகிறது. இன்று காலையில் செவிடான காதுகளைத் திறந்து கொண்டும், போலியோ ஊனமுற்றவர்களை நடக்கும்படி செய்வதும் அவர்களிடத்தில் எந்தக் குறையும் இல்லாதது போன்று செய்கிற அவரைக் கவனியுங்கள். அது என்னவாக இருக்கிறது. அது அவர்களுடைய உள் புலனாக இருக்கிறது. நான் என்ன சொல்கிறேன் என்றால் அது ஆறாவது புலன், உணர்ந்திருப்பது. ஆவி, அதாவது ஏதோ காரியம் அருகிலிருக்கிறது. தேவனில் விசுவாசமுள்ளவர்களாய் இருங்கள். 23. இப்பொழுது அவர்கள் காணவில்லை. முதலாவதாக அவன் அதைக் காணவில்லை. ஆனால் எலியா ஒருக்கால் அதைக் காணாதிருக்கலாம் ஆனால் அந்தப் பையனுடைய கண்கள் அதைக் காணும்படிச் செய்ய வேண்டுமென்று அவன் கேட்டுக்கொண்டான். ஆனால் அவர்கள் அங்கே இருந்தார்கள் என்ற உணர்வுள்ளவனாய் எலியா இருந்தான், ஆமென். தோமா ஒரு சமயம் அவருடைய விலாவில் நான் என்னுடைய விரலைப் போட்டுப் பார்க்கட்டும் என்றான். இயேசு, இப்பொழுது நீ கண்டு விசுவாசிக்கிறாய், அதை ஒருபோதும் காணாமலேயே இருந்தும் விசுவாசிக்கிறவர்களுடைய பலன் எவ்வளவு அதிகமாயிருக்குமென்று சொன்னார். அது இன்றிரவு இங்கே காணமாலேயே விசுவாசிக்கிற எவருக்குமாகிய நமக்காக அது சொல்லப்பட்டுள்ளது. கவனியுங்கள். பின்னர் எலியா இந்தச் சூழ்நிலையில் இருந்ததான அந்த இடத்திற்கு நேராக நடந்து போய் அவர்களிடத்தில் கூறினான். முதலாவது அவன் அங்கே சென்று அவர்களைக் குருடாக்கினான் என்று வேதம் கூறுகிறது. நேராக அவர்களிடத்திற்குப் போனான். ஒவ்வொருவரும் எனக்குத் தெரிந்த மட்டில் பரிபூரண கண்பார்வை உடையவர்களாய் இருந்தனர். ஆனால் வேதமோ அவர்கள் குருடாய் இருந்தார்கள் என்று கூறுகிறது. ஒரு சிறிய நபர் ஒரு சில இரவுகளுக்கு முன்னர் என்னிடத்தில் வந்து, நீர் ஒரு தேவனுடைய மனிதன் என்றால் என்னைக் குருடாக்கும் என்றான். நான் சொன்னேன், நீர் ஏற்கனவே குருடாயிருக்கிறீர் என்றேன். புரிகின்றதா! பார்த்தீர்களா! ஏற்கனவே குருடு. 24. கவனியுங்கள். இந்த மகத்தான சூழ்நிலை இருந்ததான, இந்த மகத்தான காரியம் இருந்ததான அந்த இடத்திற்கு நேராக அவன் நடந்து சென்றான். அவர்களிடத்தில் நீங்கள் எலியாவையா தேடுகிறீர்கள் என்றான். ஆம் ஐயா என்றனர். என்னைப் பின் தொடர்ந்து வாருங்கள், நான் நேராக அவனிருக்குமிடத்திற்கு கொண்டு செல்கிறேன் என்றான். அவர்கள் எதைக்குறித்து அவர்கள் குருடாய் இருந்தார்கள். அதுதான் தேவனுடைய தீர்க்கதரிசி என்ற உண்மைக்கு அவர்கள் குருடாயிருந்தார்கள். அவர்கள் அதற்கு குருடாயிருந்தார்கள். அவன் நேராக அவர்கள் மீண்டுமாக பதிவிருத்தலுக்கு மத்தியில் கொண்டு சென்றான். அவன், வாருங்கள், நான் உங்களுக்கு எலியாவைக் காட்டுகிறேன் என்றான். அவர்களை அங்கே கொண்டு சென்றதே எலியாதான். அவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தபோது முற்றிலுமாய் வளைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறதைக் கண்டார்கள். ராஜா என் தகப்பனே! நான் அவர்களைக் கொன்று போடட்டுமா? என்றான். அதற்கு அவன் ஒருவரை கைதியாக எடுக்கும்பொழுது அவனைக் கொன்று போடுவாயோ, அவர்களுக்கு புசிக்க ஏதாவது கொடுத்து அவர்களுடைய தேசத்திற்கு அவர்களைத் திருப்பி அனுப்பி விடு என்றான். அந்த விதமாகத்தான் யுத்தங்கள் தீர்க்கப்படுகின்றன. அது சரியாக இல்லையா? நிச்சயமாக. ஓ, என்னே! நாம் மட்டும் அந்த அடிப்படைக் கொள்கையை, உங்களுடைய எதிரியைப் போஷிப்பதை கடைப்பிடித்திருந்தால் நல்லது. உங்களுக்குத் தீமை செய்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், ஆமென். அங்கே, இப்பொழுது குருட்டாட்டம். 25. இப்பொழுது எலியா அல்லது என்ன சொல்கிறேன் என்றால், ஆனால் தானியேலோ, முன்னதாகவே, கண்டான். அவன் ஒரு தீர்க்கதரிசியாகவே இருந்தான். கர்த்தருடைய வருகையை அவன் கண்டான். முடிவு நேரம் வருகிறதை அவன் கண்டான். புறஜாதியார் துவங்குவதை அவன் கண்டான். நீங்கள் கவனித்துப் பார்ப்பீர்களானால் புறஜாதியார் ஒரு விக்கிரக ஆராதனையோடு துவங்கினர், அங்கே வெளியிலே வைக்கப்பட்டிருந்த ஒரு மகத்தான சிலையை, ஒரு மனிதனுடைய சிலையை அவர்கள் ஆராதித்துக் கொண்டிருந்தனர். நான் அது தானியேலினு டையதுதான் என நினைக்கிறேன். ஏனென்றால் நேபுகாத்நேச்சார் ராஜாவானவர் தானியேலை, பெல்தெசாச்சர் என்று அழைத்தான். அதுதான் அவனுடைய தேவன். அவன் ஒரு நீதியுள்ள பரிசுத்தமுள்ள மனிதனை ஆராதிக்கத் துவங்கினான். தானியேல் அதைச் செய்ய மறுத்தான். அதையேதான் அந்த எபிரேயப்பிள்ளைகளும் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களும் செய்தனர். அந்தவிதமாகத்தான் அது உள்ளே கொடுக்கப்பட்டது. அது கண்டனம் பண்ணப்பட்டது. அந்தப் பொன்னான தலையான உருவ வழிபாட்டை அதற்கு அது கட்டாயப் படுத்தப்பட்டு ஒரு இயற்கைக்கு மேம்பட்ட கரமானதுஒரு இயற்கைக்கு மேம்பட்ட பாஷையில் எழுதினது. அதை ஒரு இயற்கைக்கு மேம்பட்ட புரிந்துகொள்ளுதலால் மட்டுமே அதைப் புரிந்து கொள்ள முடியும் ஆமென். அந்தவிதமாகவே அது அப்படியே முடிவிற்கு வரும். புறஜாதி ராஜ்ஜியம் அந்தவிதமாகத்தான் உள்ளே வந்தது. அந்த வழியிலேயே அது வெளியேறும், அது உண்மை. இயற்கைக்கு மேம்பட்ட கிரியைகளினாலும், இயற்கைக்கு மேம்பட்ட வியாக்கியானத்தினாலும் வெளியேறும். நான் எதைக் குறித்துப் பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரியும். இயற்கைக்கு மேம்பட்டதான கிரியைகளைக் குறித்துப் பேசுகிறேன். ஓ, எவ்வளவு அற்புதமாய் இருக்கிறது. நீங்கள் இன்றிரவு சந்தோஷமாய் இல்லையா! உங்களுக்கு இயற்கைக்கு மேம்பட்டதில் விசுவாசமில்லையா! ஆம், ஐயா. 26. இப்பொழுது இந்த தரிசனங்களுக்குப் பிறகு இந்த தேசங்கள் எங்கே நின்று கொண்டிருக்கும் என்பதை அவனுக்கு அவர் காட்டினார். இன்னும் எத்தனை வருடங்கள் யூதர்களுக்கு எந்தவிதமாய், கொடுக்கப்படிருக்கிறது என்பதை அவனுக்குக் காட்டினார். அவர், மேசியா வருவார், அவர் எழுபதாவது வாரத்தில் தீர்க்கதரிசனம் உரைப்பார். அது மூன்றரை வருடங்களாகும். அதன்மத்தியில் அவர் சங்கரிக்கப்படுவார் அது ஏழு வருஷங்களாகும். உன்னுடைய ஜனத்தின் மேல் எழுபது வாரங்கள் குறிக்கப்பட்டிருக்கிறது. யூதர்களுக்கு சுமார் ஏழு வருஷங்கள் குறிக்கப்பட்டு இருக்கும் என்று. அவர் சொன்னார் மேசியாவாகிய பிரபு வந்து, ஏழு வாரங்களின் ஏழு நாட்களின் மத்தியில் அறுப்புண்டு போவார். அவர் தீர்க்கதரிசனம் உரைப்பார், அருவருப்பை உண்டு பண்ணுகிற பாழாக்குதல் அதன் ஸ்தானத்தில் நிற்கும் அவர்கள் எருசலேமின் மதில்களை மிதிப்பார்கள். புறஜாதியார் ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமும் அப்படியே செய்வார்கள். இப்பொழுது மேசியா வரும்பொழுது, இயேசு அவர் சரியாக மூன்றரை வருடங்கள் பிரசங்கித்து ஒரு பலிக்காக அவர் சங்கரிக்கப்பட்டார். அன்றாட காணிக்கையானது, நீங்கிப் போடப்பட்டது. பாழாக்குகிறவன், பாழாக்குதலை உண்டு பண்ணுகிற அருவருப்பு, அந்த முகமதிய ஓமர், இன்றைக்கு அந்த பரிசுத்த ஆலயத்தினிடத்திலே நின்று கொண்டிருக்கிறது. சரியாக தேவாலயம் இருந்த அதே இடத்தில் ஓமரின் முகமதிய தொழுகை ஸ்தலம் நிற்கிறது. அதாவது புறஜாதியாரின் காலம் முடிந்து தீருமட்டும் எருசலேமின் மதில்களை மிதிப்பார்கள் என்று அவர் சொன்னார். ஆனால் புறஜாதியாரின் முடிவில் அங்கே யூதர்களுக்கு இன்னும் மூன்றரை வருடங்கள் இருக்கும். இப்பொழுது தீர்க்கதரிசன வரலாற்றின் மிகமுக்கிய காரியங்களில் ஒன்றைக் கவனியுங்கள். வேதாகமத்தின் தீர்க்கதரிசனத்தை நான் அறிந்திருக்கிறேன் என்று உரிமை கோரவில்லை. ஆனால், இதுவோ தினசரி செய்தித்தாளை வாசிப்பது போன்று அவ்வளவு தெளிவாக இருக்கின்றது. நாம் இங்கே என்ன வாசிக்கிறமோ அது சத்தியமென்று அறிந்திருக்கிறோம். 27. கவனியுங்கள். இரண்டாயிரம் ஆம், இரண்டாயிரத்து ஐந்நூறு வருஷங்களுக்கு முன்னர், வானத்தின் கீழிருக்கிற அத்தனைதேசங்களுக்குள்ளும் யூதர்கள் சிதறடிக்கப்பட்டார்கள், அவர்களைத் திருப்பிக் கொண்டுவர தேவன் பார்வோனின் இருதயத்தை கடினப்படுத்தினதைப் போல அவர் ஹிட்லரின் இருதயம், முசோலினியின் இருதயம் இன்னும் மற்றவர்களுடையதையும் அவர்கள் திரும்பி பாலஸ்தீனாவிற்கும் போகும் வரைக்குமாய் தேவன் கடினப்படுத்தினார். திரும்பி வந்து அவர்களுக்கு மீண்டும் ஒரு தேசத்தை அவர்கள் உண்டுபண்ணிக் கொண்டார்கள். 1947-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதியன்று யூதக்கொடியானது இஸ்ரவேலின் மேல் 2500 வருடங்களுக்குப் பின்னர் முதன்முறையாக ஏற்றப்பட்டது. உலகத்தில் மிகவும் பழமையான கொடியானது 2500 வருடங்களுக்குப் பின்னர் முதல் முறையாக ஏற்றப்பட்டது. கடைசி நாட்களில், காலம் சமீபமாயிருக்கிறது என்பதைக் காட்டும் படியாக, எருசலேமின் மேல் கொடியை ஏற்றுவேன் என அவர் கூறினார். கவனியுங்கள் அதிக காலத்திற்கு முன்பல்ல, அந்த எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தின் தீர்க்கதரிசன தொடர்காட்சியை நான் பார்த்தேன். ஆயிரமாயிரமாய் அவர்கள் யூதர்களை ஆகாய விமானத்தில் கொண்டு வந்து கொண்டிருந்தனர். நீங்கள் அதை பத்திரிக்கை முதலானவற்றில் பார்த்திருப்பீர்கள். லுக், லைப் பத்திரிக்கைகளில் அதைப் பிரசுரித்தனர். ஆயிரக்கணக்கான யூதர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் வருகிறவர்களைப் பார்த்து, நீங்கள் எதற்காக திரும்பி வருகிறீர்கள் என்று கேட்டனர். வயதான, முடமான ஜனங்களை அவர்களுடைய முதுகின் மேல் வாலிபமானவர்கள் சுமந்துகொண்டு வந்தனர். நீங்கள் தாய் நாட்டிற்கு மரிப்பதற்காக வருகின்றீர்களா? என்று கேட்டனர். அதற்கு அவர்கள், இல்லை, மேசியாவைக் காண்பதற்காக நாங்கள் வருகிறோம் என்றார்கள். அத்திமரத்தில் இளங்கிளைத் துளிர்விடுவதை நீங்கள் காணும் பொழுது மற்ற எல்லா மரங்களெல்லாம் அதன் இளங்கிளைத் துளிர் விடுவதைக் காணும்பொழுது காலம் சமீபமாயிருக்கிறது அல்லது வசந்தகாலம், கோடைக்காலம், சமீபமாயிருக்கிறது என்று அறிந்திருக்கிறீர்கள். எனவே இந்தக் காரியங்கள் சம்பவிக்க நீங்கள் காணும் பொழுது உங்கள் தலைகளை உயர்த்துங்கள். உங்களுடைய மீட்பு நெருங்கி வந்து கொண்டிருக்கிறது என்று இயேசு கூறினார். 28. இன்றிரவு இந்த உலகமானது கம்யூனிஸத்தால் தேன்கூடு கட்டினதாய் இருக்கிறது போல, ஓ, கொஞ்ச நேரத்திற்கு முன்னர் ஒரு மனிதனிடத்தில் பேசிக்கொண்டிருந்தேன். நான் அறிந்துள்ளபடியாய் சிறந்த அதிகாரிகளில் ஒருவர் என்று நான் நம்புகிறேன். இந்த தேசம், கம்யூனிஸம் இவைகளைக் குறித்து காரியங்களை அவர்கள் பேசினபோது, உங்களுடைய கால்முட்டிகள் நடுக்கம் காண்பது உண்மை. எப்படியாய் அது தேன்கூடு போன்று கட்டியிருக்கிறது. இனிமேல் ஸ்திரமாய் எதுவுமே கிடையாது. நம்முடைய சொந்த தேசத்திலும் கூட அது கஷ்டம். ஸ்திரமாய் நிற்கும் என்று நான் அறிந்துள்ள ஒரே ஒரு காரியம் அங்கேயிருக்கிறது. அதுதான் கன்மலையாகிய இயேசுகிறிஸ்து. முடிவில்லாத ஒரு இராஜ்ஜியத்தைப் பெற்றிருக்கிறோம். இந்த நாளிலே மற்ற எல்லாக் காரியங்களும் விழுந்துகொண்டிருக்கும் பொழுது நமக்கு ஒரு திட அஸ்திபாரமான கர்த்தராகிய இயேசுகிறிஸ்து இருக்கிறார். அதற்குள்ளாக வாருங்கள் நண்பர்களே! புயலின் நேரத்திலே அது ஒரு அடைக்கலமாக இருக்கிறது. என்னே ஒரு அற்புதமான காரியம். 29. இவைகளெல்லாம் நிறைவேறுதலுக்கு வருகிறதை அவன் கண்டான். இப்போது யூதர்களை நாம் பார்க்கிறோம். வேதம், எருசலேமானது அது ஒரு ரோஜாவைப் போன்று பூ பூக்கும் எனக் கூறியுள்ளது. எப்படியாய் அவர்கள் அந்த தேசத்தை நீர்ப்பாச்சலாக்கினார்கள். அந்த நாளிலே அதற்கு வடக்கிலிருந்து தண்ணீர் வரும் என்று தீர்க்கதரிசி பேசி கூறியிருக்கிறான். அப்பொழுது அங்கே தண்ணீரே கிடையாது, அப்பொழுது அங்கே ஊற்றுகள் ஏதும் கிடையாது ஆனால் கடந்த சில வருஷங்களில் அங்கே பீச்சிக் கொண்டு அடிக்கும் தண்ணீர் வெளிவந்து அந்தப் பள்ளத்தாக்கிற்கு நீர் பாய்ச்சுகிறது. அவர்களுடைய நீர் பாய்ச்சல், உலகத்திலேயே அதனுடைய அளவிற்கு மகத்தான விவசாய ஸ்தலங்களில் ஒன்றாக இருக்கிறது. இந்த மகத்தான எல்லா ரசாயனப் பொருட்களும் அங்கேயே சவக்கடலுக்குள்ளாக இருக்கிறது. அங்கே அதன் அடியில் போதுமான, இரசாயனப் பொருட்கள் இருக்கிறது. உலகத்தின் எல்லா செல்வத்தாலும் அதை வாங்க முடியாது. ரசாயனப் பொருட்கள், யுரேனியம் மற்றெல்லா காரியங்களும் சரியாக சவக்கடலின் அடியில் இருக்கிறது. அது இப்பொழுது இஸ்ரவேலுக்கு சொந்தமானதாய் இருக்கிறது. 30. அத்திமரமானது துளிர்விட்டு இளங்கிளை தோன்றுகிறது. அதுமட்டுமல்ல மற்ற மரங்களுங்கூட துளிர்விட்டு இளங்கிளை தோன்றுகிறது. கம்யூனிஸ்டு துளிர்விட்டு இளங்கிளை தோன்றுகிறது. அந்திக்கிறிஸ்து துளிர்விட்டு, இளங்கிளை தோன்றுகிறது. தேவ சபை துளிர்விட்டு இளங்கிளை தோன்றுகிறது. அவள் மீண்டுமாய் தன்னுடைய வல்லமையில் துளிர்த்து வருகிறாள். அதன் ஒரு பகுதியை பச்சைக்கிளிகள் தின்று போட்டன. அதன் ஒரு பகுதியை கொக்கிப் புழுக்கள் தின்றுப்போட்டன. அதின் ஒரு பகுதியை முசுக்கட்டை பூச்சிகள் தின்று போட்டன ஆனால் அது மீண்டுமாய் ஜீவிக்கும் என்று தேவன் கூறியிருக்கிறார். அவள் இப்பொழுது துளிர்விட்டு இளங்கிளையை தோன்றச் செய்கிறாள். மரங்கள் துளிர்விட்டு இளங்கிளை தோன்றுகிறது. தானியேல் முன் கூட்டியே அதைக் கண்டு களிகூர்ந்தான். 31. இப்பொழுது இந்த நேரத்தில்...... அவர் சொன்னார் அக்காலத்திலே 12ம் அதிகாரம். "உன் ஜனத்தின் புத்திரருக்காக நிற்கிற அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்தில் எழும்புவான், யாதொரு ஜாதியாரும் தோன்றினது முதல் அக்காலமட்டும் உண்டாயிராத ஆபத்துக்காலம் வரும். அக்காலத்திலே புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாகக் காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்" ஓ, என்னே! உங்களுடைய பெயர் அவருடைய புத்தகத்தில் எழுதியிருக்கிறபடியினாலே நீங்கள் சந்தோஷமாக இல்லையா! இந்நேரத்தில் தானியேலாகிய அவன் அவரை பண்டைய நாட்கள் போல, அவருடைய சிரசின் மயிர் வெண் பஞ்சைப் போலிருந்தவராய் கண்டான். அவர் புத்தகங்களைத் திறந்தார். புத்தகங்களில் எழுதப்பட்டிருந்தவர்களின்படியே அவர்களில் ஒவ்வொரு மனிதனும் நியாயத்தீர்க்கப்பட்டான். மகத்தான வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பு. 32. புறஜாதி யுகத்தின் முடிவிலே தானியேலுக்கு இந்த நிச்சயம் அளிக்கப்பட்டது. நீங்கள் வீட்டிற்குப் போகும்போது 11-ம் அதிகாரத்தை வாசியுங்கள். எப்படி வடதிசை ராஜா வருகிறான் என்று. உங்களால் காணமுடியும். (அது ருஷ்யாவைத் தவிர வேறொன்றுமில்லை) ஒரு சுழற்காற்றைப்போல் அதற்கு எதிராக அழுத்தும்படியாக கீழே வருகிறது. மகத்தான அர்மெகதோன் யுத்தமானது எருசலேமின் வாசலண்டையில் தானே நடக்கும். கவனியுங்கள், ஓ, இதை நான் நேசிக்கிறேன். அக்காலத்திலே புஸ்தகத்தில், ஆட்டுக்குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதியிருக்கிறவர்களாக காணப்படுகிற உன் ஜனங்கள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள்... (ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகம்) பெரிய அதிபதியாகிய மிகாவேல் எழும்பி நிற்பான். எதற்காக, உன் ஜனத்திற்காக சரி. பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகர் எழுந்திருப்பார்கள், எப்பொழுது? இந்தக் காலங்கள் சம்பவிக்கும் பொழுது சிலர் நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும், இகழ்ச்சிக்கும் எழுந்திருப்பார்கள். 33. ஒரு நித்தியஜீவன் இங்கேயிருப்பது எவ்வளவு நிச்சயமாக இருக்கிறதோ அவ்வளவு நிச்சயமாக ஒரு நித்திய போய்விடுதலும் இருக்கிறது. உங்களுடைய ஜீவியத்தில், இயேசுகிறிஸ்துவை எந்தவிதமாய் நடத்துகிறீர் களோ அது அதைத் தீர்மானிக்கிறதாய் இருக்கிறது. நீங்கள் அவரை நேசித்து மறுபடியுமாய் பிறந்து பரிசுத்தாவியை உடையவர்களாய் இருந்தால், நீங்கள் நித்தியஜீவனை உடையவர்களாய் இருப்பீர்கள். நீங்கள் அவைகளை உடையவர்களாய் இல்லையென்றால், நீங்கள் நித்தியஜீவனை உடையவர்களாய் இல்லை. உங்களுடைய பெயர் ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் எழுதப்பட்டிருந்தால் நீங்கள் அழிவில்லாத ஜீவனை உடையவர்களாய் இருக்கிறீர்கள். அங்கே எழுதப்பட்டிருக்கவில்லையென்றால் நீங்கள் அடையாளம் கண்டுகொள்ளப்பட மாட்டீர்கள். அது என்ன? அது தீர்க்கதரிசனங்கள் எல்லாம், எல்லாக் காரியங்களும் சரியாக இந்த நேரம் வரைக்குமாய் நிறைவேறிவிட்டன. 34. பொன்னான தலையானது கடந்துபோய் விட்டதாய் இருக்கும் என தானியேல் கூறினது போன்று, பாபிலோனிய ராஜ்ஜியம் கடந்து போய்விட்டது. அதைத் தொடர்ந்து மேதிய-பெர்சியர்கள் வருவார்கள் என்று அவர் கூறினார். பாபிலோனிய ராஜ்ஜியத்தைத் தொடந்து அவர்கள் வந்தனர். அவர்கள் விழுந்து போனார்கள். யாருக்கு? கிரேக்கர்களுக்கு மகா அலெக்சான்டருக்குஅவர்களும் விழுந்து போனார்கள், யாருக்கு? ரோமர்களுக்கு. ரோமர்கள் உலக முழுவதுமாகச் சென்றார்கள் கிழக்கத்திய, மேற்கத்திய ரோமாபுரியாக இரண்டு கால்கள், இரும்பும் களிமண்ணுமான பாதங்களாக இருந்தன. பத்து விரல்களும், பத்து ராஜ்ஜியங்களாய் இருக்கும் என்று அவர் கூறினார். அவைகள் ஒன்றோடொன்று கலக்காது. அவர்கள் ஒருவர் இன்னொருவரோடு கலப்புத் திருமணம் செய்து கொள்வார்கள். அது ரோமானியஸமும், பிராடாஸ்டென்டும் என்று அவர் கூறினார். இந்தக் காரியமானது நடந்து கொண்டிருக்கிறதான அந்த நாளில் கைகளால் பெயர்க்கப்படாத மலையிலிருந்து வெட்டப்பட்ட கல் அப்பொழுது உருண்டு உள்ளே வந்து அந்தக் காரியத்தை துண்டுகளாக உடைத்தது. அந்த உருவ சிலைக்கு அதுதான் சம்பவித்தது. 35. எனவே என் சகோதரரே, இன்றிரவு நமக்குத் தொல்லைகளிருக்கிறது. யுத்தங்களும், யுத்தங்களின் செய்தியும் பல இடங்களில் பூமியதிர்ச்சிகளும், இடுக்கமான நேரமும், ஜாதிகளிடையே தத்தளிப்பும் உண்டாகும். நான் கடல் கடந்து இப்பொழுதுதான் வந்திருக்கிறேன். அவர்களுடைய காலணிகளுக்குள்ளே நடுங்கிக்கொண்டிருக்கிற தேசங்களைத் தவிர நான் வேறு ஒன்றையும் காணவில்லை. அடுத்து என்ன சம்பவிக்கப் போகிறது என்று அவர்கள் அறியாதிருக்கிறார்கள். ஆனால் அடுத்து என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை நாம் இன்றிரவு அறிந்திருக்கிறபடியால் நாம் நன்றியுள்ளவர்களாய் இருக்க வேண்டுமல்லவா! கர்த்தராகிய இயேசுகிறிஸ்து மகிமையும் கனமும் பொருந்தினவராய் இரண்டாம் முறை வருவார். ஆட்டுக்குட்டியானவரின் ஜீவபுஸ்தகத்தில் பெயரெழுதப் பட்டவர்களாய்க் காணப்படுகிற ஒவ்வொரு ஆணும், பெண்ணும் அவர்களுடைய அருமையானவர்களுடன் நடு ஆகாயத்தில் ஆண்டவரை சந்திக்கும்படியாய் எழும்பி வருவார்கள். ஓ, என்னே! ஒரு அதிசயமான காரியம். அந்தக் காரணத்தினால்தான், இயேசு கிறிஸ்துவின் நீதியோடு, இரத்தமும் தவிர அதற்கு குறைவானதின் மேல் நம்முடைய நம்பிக்கை கட்டப்படவில்லை என நாம் கூறுகிறோம். என்னுடைய ஆத்துமாவைச் சுற்றிலும் வழிவிட்டாலும் அவரே நம்முடைய நம்பிக்கையும் தாபரமுமாயிருக்கிறார். 36. பெரிய அதிபதியாகிய மிகாவேல் அக்காலத்திலே எழும்பி நிற்பார். நிச்சயமாக. மிகாவேல் கிறிஸ்துவாயிருந்தார். பரலோகத்தில் தூதர்களின் யுத்தத்தில் சாத்தானோடு யுத்தம் பண்ணினவர் அவரே! சாத்தானும் மிகாவேலும் இணைந்து யுத்தம் செய்தனர் அல்லது ஒருவர் இன்னொருவருக்கு எதிராய் யுத்தம் செய்தார்கள். இப்பொழுது அக்காலத்திலே புத்தகத்திலே எழுதியிருக்கிறவர்களாக காணப்படுகிற அனைவரும் விடுவிக்கப்படுவார்கள். நீதியை நடப்பித்தவர்கள், இதைக் கவனியுங்கள். ஞானவான்கள் ஆகாய மண்டலத்தின் ஒளியைப்போலவும் அநேகரை நீதிக்கு உட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்கு முள்ள சதாக்காலங்களிலும் பிரகாசிப்பார்கள். 37. சில சமயங்களில் நான் அதை நோக்கிப் பார்த்து, நான் இப்படி நினைப்பதுண்டு சகோதரர்களே! காலையில் நான் வெளியே போவேன்.விடியற்காலையில் எழும்புவதை நான் விரும்புவேன். விடியற்காலையில் எழுந்திருப்பது உங்களுக்குப் பிரியமில்லையா? எனக்கு நினைவிருக்கிறது. நானும் சகோதரர்களுமாய், மலையின் மேல் இருந்தபோது, விடியற்காலையில் சுமார் நான்கு மணிக்கு நாங்கள் எழும்புவோம். அங்கே பின்னாக நோக்கிப் பார்த்தால், விடிவெள்ளி நட்சத்திரம் தொங்கிக்கொண்டிருக்கும். நாள் விடிவதற்கு முன்னதாக அங்கே இருட்டாகிவிடும். இருள் இப்பொழுது ஒன்று கூடுகிறதை நாம் காண்கிறோம். அது என்ன? அது வெளிச்சம் அதற்கு எதிராக அழுத்துகிறதாய் இருக்கிறது. ஒன்று மற்றதற்கு வழிவிடவேண்டும். இரவெல்லாம் ஊடாக ஓடிக்கொண்டிருக்கிற ஊர்ந்து செல்லும் எல்லாக் காரியங்களும் சூரியன் எழும்பி வரும்போது, அந்த வெளிச்சத்தின் பிரகாசத்தினால், அவைகள் அடைக்கலத்திற்குப் போய்விடும். இரவும் வெளிச்சமும் ஒரே கட்டத்தில் இருக்க முடியாது. அது ஒன்று இருட்டாக இருக்கும் அல்லது அது வெளிச்சமாயிருக்கும். இருளைக் காட்டிலும் வெளிச்சம் அவ்வளவு அதிகமான வல்லமையை உடையதாயிருக்கிறது. அதே விதமாக கிறிஸ்துவும் உலகத்தின் எல்லாப் பொல்லாங்குகளைப் பார்க்கிலும் அவ்வளவு வல்லமை பொருந்தினவராயிருக்கிறார். இப்பொழுது, வெளிச்சம் வரத்துவங்கினால் அது இருளை உறையச் செய்யும் என்று நாம் விஞ்ஞானிகளால் போதிக்கப்பட்டிருக்கிறோம். இருளானது வெளிச்சத்தோடு போராடும்படி அதனுடைய எல்லா கூட்டாளிகளையும் ஒன்று திரட்டுகிறது. ஆனால் வெளிச்சமானது மேற்கொண்டு வெளியே வருகின்றது. 38. கடைசி நாட்களில் சாத்தான் கெர்ச்சிக்கிற சிங்கம் போல சுற்றிக் கொண்டிருப்பான் என்று வேதாகமம் கூறுகிறது. அவனுடைய எல்லா எதிராளிகளையும், அவனுடைய எல்லா நண்பர்களையும், நம்முடைய எதிராளிகளையும் ஒன்றாகத் திரட்டி, அவர்களை ஒன்றாகக் கூட்டிச் சேர்க்கிறான். ஒரு பெரிய தலைமையின் கீழ் மிருகத்தின் முத்திரையின் கீழ், குருமார்கள் ஆதிக்கத்தின் கீழ், குவித்துக்கொண்டிருக்கிறான். எல்லாமும் இணைகின்றதும் அவர்களை ஒரு மகத்தான அமைப்பாய் கத்தோலிக்கத்தைப் போன்று ஆக்கிக்கொண்டிருக்கிறது. உலக சாம்ராஜ்ஜியங்கள் அவர்களுக்குள்ளாக ஒன்று கூடி இணைகின்றனர். அங்கே அவர்களுக்கு மேல் ஒரு பெரிய தலைமையை கம்யூனிஸம் என்று அழைக்கப்படுகின்ற அரசியல் ஆதிக்கத்திற்குள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். தேவனுடைய வெளிச்சமானது தொடர்ந்து முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறது. 39. அதைச் செய்வதற்கு அதே நேரத்தில் என்ன சம்பவித்துக் கொண்டிருக்கிறது? கிறிஸ்தவ சபை, ஜீவிக்கின்ற தேவனுடைய சபையானது அபிஷேகம் பண்ணப்படுகின்றது. வல்லமை அவளுக்கு வந்து கொண்டிருக்கிறது. அவள் பரிசுத்தாவியை பெற்றுக்கொள்கிறாள். கடந்த வருடம் முழுவதும் சுவிசேஷ ஆதிக்கத்தில் பத்து இலட்சம் ஐநூறு ஆயிரம் பேர்கள் மனம்மாறினார்களாம். வருடா, வருடங்களாக மகத்தான தேசத்தை வாரிக்கொண்டதாக இருக்கிறது. நாங்கள் இதற்கு மேல் கூட்டில் இல்லை. நாங்கள் ஒரு நிழலான அல்லேலூயா! உலாவும் பாதையிலிருக்கிறோம். நாங்கள் இனி கொட்டகைக்குள்ளாக இருக்கப்போவதில்லை. முழு சுவிசேஷஊழியங்களில் பத்து இலட்சத்து ஐநூறு ஆயிரம் பேர்கள் மனம் மாறினார்கள். கத்தோலிக்கம் மற்றவர்களையெல்லாம் மிஞ்சிவிட்டார்கள். ஓ, என்னே! அது என்ன? வெளிச்சம் ஒன்று சேர்ந்து வருகிறது. மகத்தான சுகமளிக்கும் ஆராதனைகள் உலகத்தையே வாரிக்கொண்டு வந்தது. அல்லேலூயா! அங்கே உள்ளாக பார்மோஷாவில் சுகமளிக்கும் ஆராதனைக்கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கே கீழாக ஜப்பானில் சுகமளிக்கும் ஆராதனைகள், கூட்டங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. உறைந்து போகும் இடமான வடதுருவத்தில் சுகமளிக்கும் ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. உலகத்தைச் சுற்றிலுமாய் சுகமளிக்கும் ஆராதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன அல்லேலூயா! எல்லா இடங்களிலும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றுக் கொள்ளுகிறார்கள். நாம் கடைசி நேரத்திலிருக்கிறோம். 40. அது என்ன செய்கிறது? அப்பொழுது பிசாசு இப்பொழுதுதான் என்னுடைய நேரமாயிருக்கிறது என்கிறான். அவனுடைய படையை அவன் ஒன்று திரட்டி, சபைகளின் ஆலோசனை சங்கத்தைக் கூட்டி அதை நிறுத்தப் பார்க்கிறான். அவர்கள் வெறும் ஓசையிடும் பெட்டியைத் தவிர வேறு ஒன்றுமில்லை. அவர்களுக்கு அங்கே ஒன்றுமில்லை. அது எல்லாம் மத வெறியாயிருக்கிறது. இயற்கைக்கு மேம்பட்டதில் கிரியை செய்தல் போன்ற ஒரு காரியமே கிடையாது என்று சொல்லிக்கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் அமெரிக்க விஞ்ஞானத்தின் மருத்துவ சங்கமானது ஒரு சிறிய தாளை வெளியிட்டிருக்கிறது. வியாதியஸ்தர்களின் அறைக்குள் வந்து சர்வ வல்லமையுள்ள தேவனில் விசுவாசமில்லாமல் அவருடைய உதவியாளனாய் அவரை ஏற்றுக்கொள்ள முடியாத ஜனங்களுக்கு சேவை செய்வதற்கு எந்த ஒரு மனிதனுக்கும் எந்த உரிமையும் கிடையாது என்று கூறுகிறது. கிறிஸ்தவ ஹெரால்ட் கடந்த மாதம் வைத்தியர்களை பேட்டி கண்டு ஒரு சிற்றுரையை வெளியிட்டனர். நான் அதைக் குறித்து பெருமையாகப் பேசுகிறேனென்றால் அதை என்னால் எழுத முடியவில்லை . அது என்ன? எல்லாக் காரியங்களின் மத்தியில் அவருடைய மகிமைக்காக அவருடைய சத்துருக்கள் சாட்சி கொடுக்கும் படியாக தேவன் செய்வார். ஆம், ஐயா. எங்களால் உதவிக் கருவிகளை வைக்கத்தான் முடியும் ஆனால், தேவனோ சுகமளிப்பவராக இருக்கிறார் என்று வைத்தியர் கூறுகிறார். இந்தப் புத்தியில்லாத கூட்டம் எல்லாம் எல்லா நேரங்களிலும் அறிந்திருக்கிறவைகளை இந்த மகத்தான மனிதர்கள் இப்பொழுதுதான் கண்டுபிடித்துள்ளார்கள் என்று நான் கூறினேன். அது உண்மை. இந்த மகிமையான நாட்களில் ஒன்றில் வேசிகளை நல்ல ஸ்திரீகளாகவும், குடிகாரர்களை நல்லவர்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாற்றுகின்ற இந்த வல்லமைதான் எடுத்துக்கொள்ளப்படுதலில் அவர்களை இந்த பூமியிலிருந்து தூக்கிக் கொண்டு போகும், அதே வல்லமையாய் இருக்கிறது என்று நீங்கள் கண்டறிவீர்கள். அது ஒருக்கால் அதிக காலம் கடந்ததாக இருக்கலாம். அநேகருக்கு அது ஒருக்கால் அதிக காலம் கடந்ததாக இருக்கலாம். 41. அந்த நாளிலே மிகாவேல் ஜனங்களுக்காக எழும்பி நிற்பான், அவனொன்றும் ஜாதிகளுக்காக எழும்பி நிற்கவில்லை. அவர் ஜனங்களுக்காக எழும்பி நிற்கிறார். பூமியின் தூளிலே நித்திரை பண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர், நித்திய ஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும், இகழ்ச்சிக்கும், விழித்தெழும்பி யிருப்பார்கள், ஞானவான்களோ, ஆகாய மண்டலத்தின் ஒளியைப் போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப் போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள் அல்லேலுயா! ஒரு கூடாரமோ அல்லது வீடோ நான் ஏன் கவலைப்பட வேண்டும் எனக்காக. அங்கே ஒரு மாளிகை கட்டுகிறார்கள் என்றாவது ஒருநாள், என்னைப் பார்க்க வாருங்கள். 42. அது என்ன? நான் நடந்து வெளியே போய் அந்த மகத்தான, விடிவெள்ளி நட்சத்திரத்தை, அவை காலையிலேயே மிதக்கத் துவங்கினபோது பார்த்தேன். விடிவெள்ளி நட்சத்திரம் என்ன சொல்லிற்று, வந்து கொண்டிருக்கிறதான சூரியனின் பிரதான வெளிச்சத்தின் பிரதிபலிப்புத்தான் விடிவெள்ளி நட்சத்திரமாய் இருக்கிறது. அது சரியா! அது ஏன் அவ்வளவு பிரகாசமாயிருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா? சூரியனுக்கு அவ்வளவு நெருக்கமாக இருக்கிறது. அது தொடர்ந்து சென்று கொண்டேயிருக்கிறது. விடிவெள்ளி நட்சத்திரமானது சூரியனின் வருகைக்காக ஆர்ப்பரிக்கின்றது. சரி விடிவெள்ளி நட்சத்திரங்களே! உங்களைத்தான், அவருடைய வருகை ஆர்பரிக்கப் போகவேண்டிய நேரம் இதுவாயிருக்கின்றது. விடிவெள்ளி நட்சத்திரங்களே! பிரகாசியுங்கள், காலையில் சீக்கிரமாய் எழும்புங்கள். சூரியன் சீக்கிரத்தில் இங்கே இருக்கும் என்று அது கூறுகிறது. அந்த விடிவெள்ளி நட்சத்திரம் ஆகாயத்தில் ஜூவாலித்துக் கொண்டிருக்கையில் அதை நாம் நோக்கிப் பார்க்கும் போது, வெகுசீக்கிரத்தில் சூரியன் பிரகாசிக்க போகிறது என்று அர்த்தம். தேவனுடைய விடிவெள்ளி நட்சத்திரங்கள், இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் மகிமையை எழும்பிப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றதை நாம் காணும்பொழுது, பாரமான, உன்னதமான ஒருவர் வந்து கொண்டிருக்கிறார் என்பதை அது காட்டுகிறது. வெளிச்சங்கள் ஒன்று கூடுகின்றன. ஆனால் விடிவெள்ளி நட்சத்திரமோ நில்லுங்கள் பொழுது விடிவதற்கு இன்னும் அதிக நேரமில்லை என்று சத்தமிடுகிறது. நில்லுங்கள் பொழுது விடிவதற்கு இன்னும் அதிக நேரமில்லை, தொடர்ந்து அப்படியே இருங்கள். சகோதரி மர்பி மற்றும் அவர்களும் வழக்கமாக பாடுவதுபோன்று அப்படியே பற்றிக் கொண்டிருங்கள். விடியற்காலை வெளிச்சமானது சீக்கிரம் வந்து கொண்டிருக்கிறது. பகல் மட்டும் காத்திருங்கள். விடிவெள்ளி நட்சத்திரங்கள் இப்பொழுது உலகத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. மகத்தான இருளுக்கு முன்னரும் வானத்திலிருந்து வருகிற மகத்தான இடிக்கு முன்னரும் கர்த்தருடைய வருகையாகிய அந்த வெளிச்சத்தை உலகத்திற்குப் பிரகாசமாக்குகிறது. 43. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். அவர்... நான் அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பார்த்து ஓ, விடிவெள்ளி நட்சத்திரமே என்று நினைத்தேன். நான் அங்கே நின்று கொண்டு சகோதரன் வுட்டும், நானுமாக கீழாக நோக்கிப் பார்த்தோம். அவர் அப்பொழுதுதான் நெருப்பை மூட்டிய போது நாங்கள் காலை ஆகாரத்திற்குப் போய்க் கொண்டிருந்தோம். அப்படியே திரும்பி விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பார்த்தேன். அங்கேயுள்ள அந்த கேதுரு மரங்களுக்குள்ளாக நடந்து போய்க் கொண்டிருந்தோம். பைன் மரங்களின் ஊடாக காற்று குசு குசுவென சத்தமிட்டுக் கொண்டிருந்தது. அந்த நல்ல புத்தம் புதிய காலைக் காற்றை சுவாசித்துக்கொண்டு ஒருவித உணர்வு இல்லாமல் மிகுந்த உணர்வற்ற நிலையில் நான் அங்கே நின்று கொண்டிருந்தேன். அங்கே கீழே ஓடைக்குப் போய் ஒரு வாளி தண்ணீர் கொண்டுவந்தால் நீங்கள் எழுவதற்கு முன்னர் உறைந்துவிடும். அந்த பைன்களில் என்னுடைய கரங்களை உயர்த்தியபடி அங்கே நின்று கொண்டிருந்தேன். நான் அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பார்த்து, ஓ, இங்கே பாருங்கள் நாற்பத்தி ஐந்து வயது எனக்கு என்ன செய்தது என்று நான் நினைத்தேன். ஓ. இங்கே பாருங்கள். எனக்கு சுருக்கம் விழுகிறது. என்னுடைய கரங்களில் சுருக்கம் விழுகின்றதைப் பார்த்து முடிகொட்டிக் கொண்டிருக் கின்றது. பற்கள் போகின்றது. ஓ, நாற்பத்தைந்து வருடங்கள் எனக்குச் செய்தது என்ன என்று நான் கூறினேன். ஆனால் அக்கரையை நோக்கி அந்த விடிவெள்ளி நட்சத்திரத்தைப் பாருங்கள். தேவன் தம்முடைய கரத்திலிருந்து ஊதி அது பிரகாசிப்பதாக என்று கூறினாரே அந்த நாளன்று முதல் அது அழகாயும் பிரகாசமாயும் இருந்தது போலவே இருக்கிறது. 44. அப்பொழுது நான் வேதவாக்கியத்தை நினைத்தேன். ஆனால் நாம் ஞானவான்களாய் இருந்து அநேகரை நீதிக்குத் திருப்புகிறவர்களாய் இருந்தால், நாம் நட்சத்திரங்களைக் காட்டிலும் என்றென்றைக்குமாய் பிரகாசிப்போம் என்று தேவன் வாக்களித்திருக்கிறார் என்று நான் கூறினேன். விடிவெள்ளி நட்சத்திரமே இப்பொழுது நீ பிரகாசித்துக்கொண்டிருக்கிறாய் நாங்கள் அங்கே வருமட்டாய் காத்திரு அல்லேலூயா! நட்சத்திரங்களைக் காட்டிலும் என்றென்றைக்குமாய்ப் பிரகாசிப்போம் என்று நான் நினைத்தேன். அந்தப் பைன் மரங்களின் ஊடாக கிசு கிசுத்துக் கொண்டு பொழுது விடிகையில் காற்றானது கீழ் நோக்கி வருகிறதை என்னால் கேட்கமுடிகிறது. அங்கே நதியின் அப்புறமாக ஒரு தேசம் இருக்கிறது அதை என்றென்றும் இனிமை என அழைக்கிறோம் அந்தக் கரையை நாம் விசுவாசத்தின் மூலமாக அடைகிறோம் ஒருவர் பின் ஒருவராக நாம் அதை ஆதாயப்படுத்துக் கொள்கிறோம் அவர்கள் உங்களுக்காகவும், எனக்காகவும் அந்த பொன்னாலான மணிகளை ஒலிக்கும் போது அங்கே அழியாமையுள்ளவரோடு வசிக்கச் செல்லுவோம். என்ன ஒரு மகத்தான காரியம். ஞானவான்களாய் இருப்பவர்கள் அநேகரை நீதிக்கு உட்படுத்துகிறவர்களாய் இருப்பார்கள். அவர்கள் நட்சத்திரங்களைக் காட்டிலும், என்றென்றைக்குமாய் பிரகாசிப்பார்கள். ஆகையினால், எப்படியாயிருந்தாலும் அது என்ன வித்தியாசத்தை உண்டுபண்ணும்? இந்தச் சிறிய கால அளவு என்ன? இந்த பழைய பூமியின் தூள் முதுகெலும்பில்லாத கிருமி அழிந்து போய் மண்ணுக்குத் திரும்புகிற சரீரம், புழுக்கள் அதைத் தின்றுபோடும். ஓ, என்னே, எனக்கிருக்கின்ற எல்லாவற்றோடும் எழும்பி தேவனுடைய மகிமைக்காக பிரகாசிக்கட்டும். மரித்தோரிலிருந்து எழுந்த இயேசுகிறிஸ்துவை ரூபகாரப்படுத்த, சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதன் மூலமாகவும், வியாதியஸ்தரை சுகப்படுத்துவதன் மூலமாகவும், பரிசுத்த ஆவியானவர்தாமே அவருடைய வல்லமைகளையும், மகிமைகளையும் செலுத்தும்படியாக பாரமான யாவற்றையும், பக்கமாகத் தள்ளி விடுவோம். ஓ, என்னே! என்றென்றைக்குமாய்ப் பிரகாசிப்பார்கள். 45. தானியேலாகிய நீயோவென்றால், முடிவு காலமட்டும் இந்த வார்த்தைகளைப் புதை பொருளாக வைத்து, வைத்து, இந்தப் புஸ்தகத்தை முத்திரை போடு. அப்பொழுது அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள், அறிவும் பெருகிபோம் என்றான். அப்பொழுது தானியேலாகிய நான் ஆற்றுக்கு இக்கரையில் ஒருவனும் ஆற்றுக்கு அக்கரையில் ஒருவனுமாகிய வேறே இரண்டு பேர் நிற்கக் கண்டேன். சணல் வஸ்திரம், பரிசுத்த ஆவி தரித்தவரும், ஆற்றின் தண்ணீர்களின் மேல் நிற்கிறவருமாகிய புருஷன் ஒருவன் நோக்கி..... ஜனங்களின் மேல் பரிசுத்த ஆவி, ஓ, அல்லேலூயா! பரிசுத்த ஆவி வெளிப்படுத்துதல் 15:16-ல் அடர்த்தியும் திரளானவர்களும் எனக் கூறுகிறது. தண்ணீர் என்றால் அடர்த்தியும் கூட்டமுமான ஜனங்களுமாம். இங்கே ஒருவர் வெண்மையான சணல் வஸ்திரம் தரித்தவராய் தண்ணீர் மேலே நின்று கொண்டு மேலும் கீழும் தன்னை அசைவாட்டிக் கொண்டு வானத்தை நோக்கித் தன் கரங்களை உயர்த்தி, இந்தக் காரியங்களெல்லாம் சம்பவிக்கும் போது இனி காலம் செல்லாது என்று என்றென்றைக்கும் ஜீவித்திருக்கிறவர் பேரில் ஆணையிட்டான். அல்லேலூயா! இனிகாலம் செல்லாது. தேசங்கள் உடைவதையும், அதைப்போன்று காரியங்கள், சம்பவிப்பதையும் காணும் பொழுது, தேவ இரகசியம் ஏற்கனவே நிறைவேறியாயிற்று என்று ஆணையிட்டார். 46. தேவ இரகசியம் அது என்ன? தேவன் உங்களுக்குள்ளாக மகிமையின் நம்பிக்கையாய் இருந்து பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பிரகாசித்துக்கொண்டிருப்பதே ஆகும். பின்னர் அவர் இவைகளெல்லாம் சம்பவிக்கும் போது, அப்பொழுது இனிகாலம் செல்லாது என்று கூறினார். தங்கள் தேவனை அறிந்திருக்கிற ஜனங்கள் என்று தானியேல் கூறுகிறான். கடைசி நாட்களில் அநேகர் இங்கும் அங்கும் ஓடி ஆராய்வார்கள் அறிவும் பெருகிப்போம், ஆனால் தங்கள் தேவனை அறிந்திருக்கிறவர்கள் திடன்கொண்டு கடைசி நாட்களில் அதற்கு ஏற்றபடி செய்வார்கள். அவர்கள் அதற்கு ஏற்றபடி செய்வார்கள். ஓ, என்ன? விசுவாசத்தின் பிரசித்திப்பெற்ற செயல்கள் இன்றிரவு உலகத்தைச் சுற்றிலுமாய் மீண்டும் மீண்டுமாய் நடந்து கொண்டிருக்கின்றன. தேசங்கள் எல்லாவற்றிலும் மகத்தான கூட்டங்கள். குருடர்கள் காண்கிறார்கள், செவிடர்கள் கேட்கிறார்கள், முடவர்கள் நடக்கிறார்கள் எல்லாவிதமான வாழ்க்கையிலும் ஈடுபடுபவர்கள் உள்ளே வருகின்றனர், அவர்கள் பரிசுத்தாவியைப் பெறுகின்றனர். ஏழையும் தரித்திரனும் மட்டுமல்ல, இலட்சாதிபதியும் மற்ற எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர். தேவன் தம்முடைய மேலாடையை எடுத்து ஒவ்வொருவர் மேலும் போட்டு அவர்கள் ஒவ்வொருவருக்கும் கல்யாண விருந்திற்கு ஒரு அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். என்றாவது ஒருநாள் மகத்தான பிரதான ஆசாரியரான மெல்கிசேதேக்கு வருவார். இந்த மகத்தான மகிமையின் நாட்களில் ஒன்றில் நாம் புத்தம் புதியதாய் இராப்போஜனத்தை அவரோடு கூட தேவனுடைய ராஜ்ஜியத்தில் புசிப்போம். தேவனுடைய இராஜ்ஜியத்தில் இருப்பதற்காக இன்றிரவு நான் அவ்வளவு சந்தோஷமாய் இருக்கிறேன், ஆம் ஐயா. ஏதோ மகத்தான நாளில், ஏதோ அதிசயமான நாளில் இனிகாலம் செல்லாததாய் ஆகிவிடும். 47. பாருங்கள், நாம் நித்தியத்திலிருந்து நாம் வெளியே வந்தோம். உலகம் என்று ஒன்று உண்டாவதற்கு முன்னர் நாம் இருந்தோம். உங்களுக்கு அது தெரியுமா? தேவன் மனிதனை தம்முடைய சொந்த சாயலில் உண்டு பண்ணினார். யோபு தனக்கு ஞானம் இருக்கிறது என்று நினைத்த பொழுது, அவர் யோபுவினிடத்தில், நீ எங்கேயிருந்தாய் என்று கேட்டார். நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது, அதைச் செய்வதற்கு முன்னர் தேவபுத்திரர் எல்லாரும் கெம்பீரித்தபோது, விடியற்காலத்து நட்சத்திரங்கள், ஏகமாய் ஆர்ப்பரித்தபோது நீ எங்கே இருந்தாய் என்றார். விடியற்காலத்து நட்சத்திரங்கள் சந்தோஷத்தால் கெம்பீரித்து என்றோ ஒருநாள் பூமியில் தாபரிப்போம் என்பதை அவைகள் கண்டபோது பிரகாசிக்கின்ற அவைகள் சந்தோஷத்தால் கெம்பீரித்தன. மெல்கிசேதேக்கு ராஜா தேவனுடைய நீதியில் வந்து மீண்டுமாய் தேவனிடத்திற்கு மீட்டுக் கொள்ளும் படியாக அவருடைய ஜீவனைக் கொடுப்பார். இப்பொழுது சதாகாலங்களிலும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற நட்சத்திரங்களாய் இருப்போம். நான் பூமியை அஸ்திபாரப்படுத்தினபோது நீ எங்கே இருந்தாய்? அதின் ஆதாரங்கள் அதின் மேல் போடப்பட்டது. அவைகள் எதன்மேல் நிற்கிறது என்று கூறு என்றார். இப்பொழுது உன்னை இடைக்கட்டிக்கொள். நான் உன்னிடத்தில் ஒரு புருஷனைப்போல பேசப்போகிறேன் என்றார். யோபு ஒரு செத்த மனிதனைப் போல முகம்குப்புற விழுந்தான். அவனால் அதைத் தாங்க முடியாமல் போயிற்று தேவன் அங்கேதான் இருந்தார். அங்கேதான் காரியம். பூமியை அஸ்திபாரப் படுத்துகிற போது நீ எங்கேயிருந்தாய்? 48. இந்த மகிமையான சுவிசேஷமானது பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளால் தீர்க்கதரிசனமாய்க் கூறப்பட்டது. அது காலங்களாய் வந்துகொண்டிருந்து. இன்றிரவு இதோ இங்கே இருக்கின்றது. அது தேவனால் ரூபகாரப்படுத்தப்பட்டது. அவள் உலகத்தையே சுற்றி வந்தாள். அவர்கள் அதை வெளியே எறிந்துப்போட முயற்சித்தார்கள். ஆனால், பெருங்காற்றான ஒரு நாளிலும் ஒரு தீயை அணைக்க முயற்சித்துப்பார். ஒரு காட்டிலுள்ள காய்ந்துபோன மரத்தின் தீயை அணைக்க முயற்சித்துப்பார், ஏன்? உங்களால் முடியாது. எவ்வளவு அதிகமாக காற்று அதற்கு கொடுக்கும். நீங்கள் அதற்கு அதிகமான காற்றைக் கொடுத்தால் அது இன்னமும் கடினமாக எரியும். அதுதான் காரியம். மலையின் மேல் வழக்கமாக நாங்கள் ஒரு சிறிய தீயை உண்டாக்குவோம். நான், விடியற்காலையில் ஒரு தீயை உண்டாக்க வழக்கமாக முயற்சிக்கும் போது, வெளியே போய் அதன் மேல் சில குச்சிகளைப் போடுவேன். அவைகள் புகையத் துவங்கும். அங்கே கொஞ்சம் புகை இருக்கின்ற வரைக்கும் அங்கு எங்கேயோ தீ இருக்கிறதை நான் அறிவேன். நான் செய்ய வேண்டிய ஒரே காரியம் என்னவென்றால் என்னுடைய தொப்பியை எடுத்து அதை விசிறிக் கொண்டிருக்க வேண்டும். முடிவிலே அது தீபிடித்துக் கொள்ளும். இன்றைக்கு சபைக்கு தேவையாய் இருப்பதெல்லாம் அதுதான். கர்த்தராகிய இயேசுகிறிஸ்து அவருடைய மகிமையில் வரும்பொழுது, அவரை ஏற்றுக்கொள்ள விசுவாசத்தை திருப்பி விசிறச்செய்ய பெந்தெகொஸ்தே நாளன்று பலத்த காற்று வந்தது போன்று இன்னொரு காற்றின் விசுறுதலே தேவையாயிருக்கிறது. 49. அடையாளங்கள், அற்புதங்கள் சம்பவித்துக்கொண்டிருக்கிற விநோதமான காரியங்களை நோக்கிப் பாருங்கள். இயேசு சொன்னவிதமாகவே, பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், கடல் அலைகள் அத்து மீறி வந்து கரையைக் கடந்து செல்லும். புருஷர்களுடைய இருதயங்கள் பயத்தால் கரைந்துபோகும். பயம், ஓ, கோபால்ட் வெடிகுண்டை யார் முதலில் தூக்கி எறியப்போகிறார்கள் என்ன சம்பவிக்குமோ. ஒரு சில மணி நேரத்தில் முழு உலகமும் அக்கினியால் அழிந்து போகும். ஏன் அந்தக் குண்டு விமானத்தி லிருந்து வருவதற்கு முன்னதாகவே, நாம் தேவனுடைய சமூகத்திலிருப்போம். அது உண்மை . அது என்னவாக இருக்கும், அது ஒன்றுமாக இருக்காது. ஆனால் நாம் இந்தப் பழைய மாம்சமான மேலாடையை கீழே போட்டுவிடுவோம். கீழே போட்டுவிட்டு எழும்பி நித்தியமான பரிசைப் பெற்றுக்கொள்வோம். ஆகாயத்தின் ஊடாக கடந்து செல்கையில் பிரிவு உபச்சாரம், பிரிவு உபச்சாரம் என்று ஆர்ப்பரிப்போம். இனிய ஜெபவேளை. அதெல்லாம் தீர்ந்து போயிருக்கும் நாம் வீட்டிற்குப் போவோம். இந்த பழைய சரீரத்தை கீழே கிடத்தி அதை ஒரு கிரீடம், மேலங்கிக்காக, பண்டமாற்று செய்வோம். அது ஒருபோதும் தேய்ந்து போகாது. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மகிமையில் நடக்க சதா காலங்களாய் எல்லாவற்றைக் காட்டிலும் பிரகாசித்து அழியாமையாய் ஜீவிக்கும்படியாக ஒரு வயதான மனிதனிலிருந்து ஒரு வயதான ஸ்திரீயிலிருந்து ஒரு வாலிப நபராய் மீண்டும் திரும்புவோம். உன்னதத்திலிருக்கிற தேவனுக்குமகிமை, நமது மத்தியில் மகத்தான காரியங்களைச் செய்தார் என்று பாடுவோம். 50. இன்றைக்கு நாம் பிரயாணத்தில் எல்லாக் காரியங்களையும், எல்லா இடங்களிலும் தேவனுடைய வல்லமையோடு, ரூபகாரப்படுத்திக் கொண்டிருக் கையிலே, நாம் சுற்றும் முற்றும் பார்த்து நாம் எங்கே இருக்கிறோம் என்று பார்ப்போமாக. அத்திமரம் துளிர்விட்டு இளங்கிளை தோன்றுவதைப் பாருங்கள். மற்ற மரங்களும் துளிர்விட்டு இளங்கிளை தோன்றுவதைப் பாருங்கள். ஜாதிகள் துளிர்விட்டு இளங்கிளை தோன்றுவதைப் பாருங்கள். பரிசுத்தாவி சபை துளிர்விட்டு இளங்கிளை தோன்றுவதைப் பாருங்கள். செய்ததையே செய்கிறதும், திரும்பி வருகிறதும் அதே அடையாளங்களும் அற்புதங்களோடுள்ள பெந்தெகொஸ்தேவை நோக்கிப் பாருங்கள், அல்லேலூயா! நாம் ஜெபம் செய்வோமா. 51. பரலோக பிதாவே, இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமைக்காகவும், அவர் தாமே மகத்தான, பிரதானமானவராக இருப்பதற்காகவும், அவருடைய பரிசுத்தாவியின் அபிஷேகத்திற்காகவும் இன்றிரவு நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். நீர் இங்கு ஜீவிக்கிறவராய் இருக்கின்ற படியாலும், என்றென்றும் ஜீவித்து நம்முடைய அறிக்கையின் பேரில் பரிந்து பேசுகிறவராய் இருக்கிறபடியால் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகின்றோம். அக்கினி தீபங்களைப் போன்று, எங்களைப் பிடித்த உம்முடைய சுகமளிக்கும் வல்லமைக்காக கர்த்தாவே, நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். கீழே பாதாளத்திலிருந்து கொண்டுவந்து எங்களை உயரே எழுப்பி எங்களுடைய பெலத்தை புதுப்பித்து, வல்லமையை எங்களுக்குக் கொடுத்து நாங்கள் புறப்பட்டுப்போய் இங்கே இந்த இருளிலே பிரகாசிக்கும்படி செய்தீர், இதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம் பிதாவே! 52. இரட்சிக்கப்படாதிருக்கிற ஒவ்வொருவரையும் ஆசீர்வதிக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம். இரட்சிக்கப் பட்டிருக்கிற யாவரையும் ஆசீர்வதியும். இதையளியும் பிதாவே. எல்லா வியாதியஸ்தரையும் சுகப்படுத்தும். மகிமையைப் பெற்றுக்கொள்ளும். இந்த சிறிய ஜெபக்கூடாரத்தை ஆசீர்வதியும். போதகராகிய சகோதரன் நெவிலை ஆசீர்வதியும். எல்லா கண்காணிகளையும், தர்மகர்த்தாக்களையும் ஆசீர்வதியும். இதையளியும் கர்த்தாவே. உம்முடைய சுகமளிக்கும் கரங்களை அவர்கள் மீது வையும், ஒருக்கால் பிசாசு வந்து சிறிய பாகுபாடுகளை உண்டாக்கினால் அதை இப்பொழுதே கீலேயாத்தின் பிசின் தைலத்தினால் சொஸ்தப்படுத்தும் கர்த்தாவே. இதை அருளும் கர்த்தாவே. அவர்கள் மேல் மேல் உம்முடைய அபிஷேக தைலத்தை ஊற்றியருளும். அவர்களை இருதயத்தில் தாழ்மையாயும், ஆத்துமாவில் இனிமையாயும் உள்ளவர்களாக்கும். கர்த்தராகிய இயேசுவின் அடிச்சுவடுகளில் அவர்கள் நடப்பார்களாக. சரீரப் பிரகாரமான காரியங்கள் அவர்களுக்கு சம்பவித்து அவர்கள் சுகவீனமாவார்களானால், அவர்கள் மேல் இயேசுவின் இரத்தத்தைப்பூசும்படியாக இயேசுவினுடைய தூதன்தாமே அவர்கள் அருகில் நிற்பார்களாக. இதையளியும். எல்லா வியாதியஸ்தர்களையும் சுகப்படுத்தும். 53. அங்குள்ள அந்தத் தேவையைக் கண்டு நான் அக்கரை வேலையில் போயிருக்கும்போது எனக்கு உதவி செய்யும் கர்த்தாவே. இந்த நாளிலே எங்களுக்கு என்ன ஒரு தேவையாயிருக்கிறது. இலட்சக்கணக்கானோர்கள் மரித்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள். கிறிஸ்துவை அறியாமலேயே இன்றைக்கு இலட்சத்து நாற்பத்து நான்காயிரம் அஞ்ஞானிகள் மரித்துப் போய்க்கொண்டிருக்கிறார்கள். எனக்கு உதவி செய்யும். அன்புள்ள தேவனே! எங்கள் எல்லோரையும் ஒன்றாக ஆசீர்வதியும். ஒருநாள் இந்த பூமியிலிருந்து எங்களை எழுப்பி கர்த்தாவே, அக்கரையிலே உம்மோடு கூட உம்முடைய சிங்காசனத்திலே உயர உன்னதங்களிலே இயேசு கிறிஸ்துவுக்குள் உட்கார வையும். இதையளியும் பிதாவே. அந்த நேரம் வரைக்குமாய் சுகமும் பெலனும் எங்களுடையதாய் இருப்பதாக. இதை நாங்கள் இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம், ஆமென். ஓ, நான் அவரைக் காணவிரும்புகிறேன், நான் அவருடைய முகத்தைக் காண விரும்புகிறேன் அங்கு என்றென்றுமாய் அவருடைய இரட்சிப்பின் கிருபையைப் பாடுவேன் மகிமையின் வீதிகளில் என்னுடைய சத்தத்தை நான் உயர்த்தட்டும் எல்லாக் கவலைகளையும் விட்டு, வீட்டை அடைந்து என்றுமாய் களிகூருவேன் இந்த தேசத்தின் வழியாய்நான் பிரயாணம் செய்து பாடிக்கொண்டே செல்லுவேன் ஆத்துமாக்களுக்குக் கல்வாரியின் இரத்த ஊற்றைச் சுட்டிக்காட்டுவேன் அநேக அம்புகள் என் ஆத்துமாவின் உள்ளும் புறம்புமாக ஊடுருவிச் சென்றாலும் ஓ, நான் அவரைக் காண விரும்புகிறேன், அவர் முகம் காண விரும்புகிறேன் அங்கு என்றென்றுமாய், அவருடைய இரட்சிப்பின் கிருபையைப் பாடுவேன் மகிமையின் வீதிகளில் என்னுடைய சத்தத்தை நான் உயர்த்தட்டும் எல்லாக் கவலைகளையும் விட்டு, வீட்டை அடைந்து என்றுமாய்களிகூருவேன். 54. இப்பொழுது சிறிது கவனியுங்கள். இங்கு எத்தனை மெத்தொடிஸ்டுகள் இருக்கிறார்கள். உங்கள் கரங்களை மெத்தொடிஸ்டுகளே உயர்த்துங்கள். எத்தனை பாப்டிஸ்டுகள் இங்கே இருக்கிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இங்கே எத்தனை பிரஸ்பிடேரியன்கள் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். நசரீன்கள் எத்தனை பேர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள். எத்தனை பெந்தெகொஸ்தே இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள், எத்தனை லூத்தரன்கள் இருக்கிறீர்கள்? உங்கள் கரங்களை உயர்த்துங்கள் நாமெல்லாரும் இங்கே இருக்கிறோம் நல்லது. பாருங்கள், ஒரு மகத்தான பெரிய குழு எல்லாம் கலந்ததாக எல்லோரும் ஒரே இடத்தில் உன்னதங்களில் உட்கார்ந்து கொண்டு, ஆசீர்வாதத்தில் களிகூர்ந்து கொண்டிருக்கிறோம். இப்பொழுது மெத்தொடிஸ்டுகள் பாப்டிஸ்டுகளோடும், பாப்டிஸ்டுகள் லூத்தரன்களோடும் கரம் குலுக்கும்படி நான் விரும்புகிறேன். அப்படி சுற்றி திரும்பி ஒருவர் இன்னொருவருடைய கரங்களைக் குலுக்குங்கள். இந்த வழியாய்த் திரும்பி அப்படியே குலுக்குங்கள். நாம் அதைப் பாடிக் கொண்டிருக்கையில் கரம் குலுக்குங்கள். ஆத்துமாக்களுக்குக் கல்வாரியின் இரத்த ஊற்றைச் சுட்டிக்காட்டுவேன் அநேக அம்புகள் என் ஆத்துமாவின் உள்ளும் புறம்புமாக ஊடுருவிச் சென்றாலும் ஓ, ஆனால் என்னுடைய கர்த்தர் என்னை நடத்துவார் அவர் மூலமாக நான் ஜெயங்கொள்ளுவேன், ஓ, நான் அவரைக் காணவிரும்புகிறேன், நான் அவருடைய முகத்தைக் காண விரும்புகிறேன் அங்கு என்றென்றுமாய் அவருடைய இரட்சிப்பின் கிருபையைப் பாடுவேன் மகிமையின் வீதிகளில் என்னுடைய சத்தத்தை நான் உயர்த்தட்டும் எல்லாக் கவலைகளையும் விட்டு, வீட்டை அடைந்து என்றுமாய் களிகூருவேன் 55. அது உங்களுக்கு நன்மையான உணர்வை உண்டாக்குகிறது அல்லவா! உங்களுடையதெல்லாம் என்பதான உணர்வை உண்டாக்கவில்லை. இங்கே எத்தனை கிறிஸ்தவர்கள் இருக்கிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைத்திருக்கிற அனைவரும் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஓ, என்னே! என்னே! ஒரு அற்புதமான காரியம். இப்பொழுது நாம் நம்முடைய வித்தியாசப்பட்ட வீடுகளுக்கு பிரிந்து போகையிலே ஜெபத்தோடு நாம் போவோமாக. இப்பொழுது நாம் நம்முடைய பழைய கலைந்து போகும் பாடலை பாடுவோமாக! எத்தனை பேர்களுக்கு அது தெரியும். உங்களோடு இயேசுவின்நாமத்தை கொண்டு செல்லுங்கள் என்ற பாட்டு எல்லோருமாகச் சேர்ந்து இப்பொழுது பாடுவோமாக. இயேசுவின் நாமத்தை உங்களோடு கொண்டு செல்லுங்கள், துக்கம் மற்றும் அய்யோ என்பவர்களின் பிள்ளைகளே அது உங்களுக்கு சந்தோஷத்தையும் ஆறுதலையும் கொடுக்கும் எவ்விடம் சென்றாலும் நீங்கள் அதைக்கொண்டு செல்லுங்கள் விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாம், விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாம். கவனியுங்கள். இயேசுவின் நாமத்தில் பணிந்து கொள்ளுங்கள் அவர் பாதத்தில் தாழ விழுங்கள் ராஜாதிராஜாவாக பரலோகத்தில் நாம் அவருக்கு முடி சூட்டுவோம் நம்முடைய யாத்திரை அப்போது முடிந்து போகும் விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது (ஓ எவ்வளவு இனிமையானது) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாம் விலையேறப்பெற்ற நாமம், ஓ எவ்வளவு இனிமையானது! இங்கே நீங்கள் இதைத்தான் செய்ய நான் விரும்புகிறேன். இயேசுவின் நாமத்தைக் கொண்டு செல்லுங்கள் எல்லாக் கண்ணிகளுக்கும் கேடகமாக சோதனைகள் உன்னைச் சூழ்ந்து கொள்ளும் போது அந்த பரிசுத்த நாமத்தை ஜெபத்திலே சுவாசியுங்கள் விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாம் விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எவ்வளவு இனிமையானது (எவ்வளவு இனிமையானது) பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாம்... 2